அருமையான சேமியா கேசரி செய்வது எப்படி?

அருமையான சேமியா கேசரி செய்வது எப்படி?

சேவை என்பது வீட்டில் அரிசிமாவால் தயார் தேவைப்படும் போது செய்யப்படுவது. சேமியா என்பது துரும் கோதுமை மைதாவல் தயாரிக்கப்பட்டு கடைகளில் கிடைக்கும்.
சேமியா கேசரி
எனவே இரண்டும் வெவ்வேறு. சேமியாவை ஒரு முறை வேக வைத்தால் போதும். சேவை இரண்டு முறை வேகவைக்கப்பட வேண்டும்.

இரண்டுன் செய்முறைகளும் வேறு ஆகும். சேமியாவை எப்படி தயார் செய்வது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். உடனடியாக அவசரத்துக்கு ஏதாவது உணவு தயார் செய்ய வேண்டுமானால் சேமியா இருந்தால் போதுமானது. 
விதவிதமாக செய்து அசத்தி விடலாம். சேமியா இருந்தால் போதும் சேமியா உப்புமா, சேமியா கேசரி, சேமியா பாயசம் என்று செய்து அசத்தி விடலாம்.

பொதுவாக புதிய உணவு வகை என்பது யாரும் யோசிக்காத வகையில் பலரும் விரும்புபடியான ஒரு ரெசிபி செய்வது தான் புதிய உணவு வகையாக பெயர் பெற்றுள்ளன.

அப்படி சேமியாவை வைத்து செய்யப்படும் சேமியா கேசரி சுவையும் புதிதாகத்தான் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள் :

சேமியா - 500 கிராம்

சர்க்கரை - 400 கிராம்

தண்ணீர் - 400 மி.லி.

நெய் - தேவையான அளவு

முந்திரி பருப்பு - தேவையான அளவு

திராட்சை - தேவையான அளவு

ஏலக்காய் - 3

கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை :

சேமியா, முந்திரிப் பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும். சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேக விடவும்.

கட்டி விழாமல் இருக்க கை விடாமல் கிளற வேண்டும். சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். 
எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரி பருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகிய வற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும். 
பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும். சுவையான சேமியா கேசரி தயார். இதில் உங்களுக்கு பிடித்தமான நட்ஸ் எதை வேண்டு மானதும் சேர்த்து கொள்ளலாம்.

குறிப்பு :

தண்ணீரில் ஊற வைத்த கருப்பு திராட்சையை சுயாதீனமாக சாப்பிடலாம் அல்லது சாலடுகள், தானிய கிண்ணங்கள் அல்லது மிருதுவாக்கிகளில் சேர்க்கலாம். 

இந்த திராட்சையை தவறாமல் உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுத்து, ஒட்டு மொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

தினமும் 5 உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இந்த பழக்கத்தை நீங்கள் தினமும் கடைப்பிடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். 

ஊற வைத்த உலர் திராட்சை தரும் நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான ராதிகா கோயல் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
Tags: