கேரட் கீர் செய்வது | Carrot kheer !





கேரட் கீர் செய்வது | Carrot kheer !

தேவையான பொருள்கள் : -

நறுக்கிய கேரட் - 2 கப்,

பால் - 4 கப்,

சர்க்கரை - 4 கப்,

முந்திரிப்பருப்பு - 10,

தோல் உரித்த பாதாம் - 10,

குங்குமப்பூ - 1/4 டீஸ்பூன் (1/4 கப் சூடான பாலில் ஊற வைக்கவும்),

ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்.

அலங்கரிக்க...

பாதாம், முந்திரி, பிஸ்தா, வெள்ளரி விதை, சாரைப் பருப்பு - சிறிது, 

நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை : -
கேரட் கீர் செய்வது
கேரட்டை 2 கப் தண்ணீரில் நன்றாக வேகவைத்து ஆற வைக்கவும். வேகவைத்த கேரட், பாதாம், முந்திரி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இக்கலவையை பாலுடன் சேர்த்து அடிகனமான பாத்திரத்தில் அடிபிடிக்காமல் கிளறி கொதிக்க விடவும். லேசாக ெகட்டியானதும், சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும். 

கீர் ெகட்டியாக இருந்தால் பால் சேர்த்து பாயசம் பக்குவத்திற்கு கொண்டு வரவும். குங்குமப்பூ, ஏலக்காய் தூவி அடுப்பை விட்டு இறக்கவும். 

நெய்யை சூடாக்கி அலங்கரிக்க கொடுத்த பருப்புகளை நிறம் மாறாமல் வறுத்து கேரட் கீருடன் சேர்த்து கலக்கி சூடாக பரிமாறவும்.
Tags: