தேவையான பொருள்கள் :

வாழைப்பழம் - ஒன்று (பெரியது)

ப்ரெட் ஸ்லைஸ் - 4

ஜாம் - 2 தேக்கரண்டி

பட்டர் - ஒரு தேக்கரண்டி

தேன் - ஒரு தேக்கரண்டி

செய்முறை :
கிட்ஸ் பனானா டோஸ்ட்

வாழைப் பழத்தை வட்டத் துண்டுகளாக நறுக்கி தேன் ஊற்றிக் கலந்து வைக்கவும். 

பட்டர் மற்றும் ஜாமை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ப்ரெட் துண்டுகளின் மீது பட்டர் ஜாம் கலவையைத் தடவி வைக்கவும். 

அதன் மேல் வாழைப்பழத் துண்டுகளை (விரும்பியவாறு) அடுக்கி, மற்றொரு ப்ரெட் துண்டை வைத்து மூடிவிடவும்.

பிறகு அதை டோஸ்டர் அல்லது தவாவில் பட்டர் (அ) எண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும். ஈஸி & டேஸ்டி கிட்ஸ் பனானா டோஸ்ட் ரெடி.