எம்டி பிரியாணி செய்முறை | Embti Biriyani Recipe !

தேவையான பொருள்கள் :
பாசுமதி அரிசி - ஒன்றரை கப்

வெங்காயம் - 3

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 7 பற்கள்

தக்காளி - 2

புதினா, கொத்த மல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

பச்சை மிளகாய் - 2

எலுமிச்சை - பாதி

உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடிக்க:

பட்டை - ஒரு துண்டு

லவங்கம் - 2

ஏலக்காய் - ஒன்று

மிளகு - 4

சீரகம் - ஒரு சிட்டிகை

சோம்பு - ஒரு சிட்டிகை

ஜாதிக்காய் - கால் பாகம்

ஜாதிபத்திரி - கால் பாகம்

நட்சத்திர மொக்கு - சிறு துண்டு

தாளிக்க:

பிரியாணி இலை - ஒன்று

பட்டை - ஒரு துண்டு

லவங்கம் - 2

ஏலக்காய் - 2

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை :

வறுத்து பொடிக்க வேண்டிய வற்றை வெறும் கடாயில் லேசான தீயில் வைத்து வறுத்து, ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து ஊற வைக்கவும்.
எம்டி பிரியாணி செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, தட்டிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிள்காய் சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்த மல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

பிறகு தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

அத்துடன் 2 1/2 - 3 கப் தண்ணீர் (பயன்படுத்தும் அரிசிக்கு ஏற்ப) ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அரிசியைத் தண்ணீரில்லாமல் வடித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் மூடி போட்டு தீயைக் குறைத்து வைத்து வேக விடவும்.

முக்கால் பதம் வெந்ததும் பொடித்த மசாலா தூவி எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மூடி, 15 நிமிடங்கள் தம்மில் வைத்திருந்து எடுத்துக் கிளறி விடவும்.

அசைவ பிரியாணியைப் போலவே மணமும், சுவையும் நிறைந்த எம்டி பிரியாணி (Empty Biriyani) தயார்.
Tags:

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !