முள்ளங்கி நெத்திலி பொரியல் செய்முறை / Radish Roasting Recipe !





முள்ளங்கி நெத்திலி பொரியல் செய்முறை / Radish Roasting Recipe !

தேவையான பொருள்கள் :

முள்ளங்கி - கால் கிலோ

நெத்திலி கருவாடு - 100 கிராம்

புளிக்கரைசல் - கால் கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

நெத்திலி கருவாட்டை சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

முள்ளங்கி நெத்திலி பொரியல்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நெத்திலியைப் போட்டு பொரிய விடவும்.

கருவாடு பொரிந்து வாசனை வந்தவுடன், மிளகாய் தூள், புளிக்கரைசல் தவிர மற்ற பொருட்களைச் சேர்த்து வதங்க விடவும்.

வதங்கியதும் மிளகாய் தூள், புளிக்கரைசல் சேர்த்து வேகவிடவும்.

அனைத்தும் சேர்ந்து திரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான முள்ளங்கி நெத்திலி பொரியல் தயார்.
Tags: