சுவையான‌ கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?





சுவையான‌ கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?

அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடு தான். 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் உள்ளது. இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். 
சுவையான‌ கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
கருவாடுகளில் ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். 

உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள். சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச் சாறு சிறந்த மருந்தாகும். 

கருவாடு சாப்பிடுவதால், பூச்சிகளை அகற்றும்.. கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கு அருமருந்தாவது இந்த கருவாடு தான். 
நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளைச் சரி செய்ய உதவுகிறது. பிரசவித்த பெண்களுக்கு பால் சுரக்க வேண்டுமானால், பால் சுறா கருவாடு போல சிறந்த தீர்வு வேறு கிடையாது. 

இது போலவே திருக்கைமீன் கருவாடிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. கொடுவா கருவாடு வாங்கி குழம்பு வைத்தால், அதுவே பலருக்கு மருந்தாகி விடும். 

காரணம், கொடுவாமீனை விட கொடுவா கருவாடில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது..சரி இனி ஆட்டு மூளை பயன்படுத்தி டேஸ்டியான ஆட்டு மூளை மசாலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருள்கள் :

நெத்திலி கருவாடு - 25

மொச்சை - 1 கப்

கத்திரிக்காய் - 2

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 1

புளி - ஒரு நெல்லிக் காய் அளவு

கறிவேப்பிலை - சிறிது

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி

கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு - தாளிக்க
கண்ட இடத்துல கண்டதை சாப்பிடாதீங்க !
செய்முறை :

நெத்திலி கருவாடை சூடான நீரில் 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்ததை நன்றாக 4 - 5 முறை நீர் மாற்றி சுத்தம் செய்து எடுக்கவும். மொச்சையை ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும்.

கருவாட்டு குழம்பு செய்முறை

பாத்திர த்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், கறிவேப் பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங் கியதும் கத்திரிக் காயை சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து தேவை யான நீர் விட்டு கொதிக்க விடவும்.

தூள் பச்சை வாசம் போனதும் வேக வைத்த மொச்சை, கருவாடு சேர்த்து மூடி கொதிக்க விடவும். கருவாடு நன்றாக வேக வேண்டும்.
பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?
கடைசி யாக புளி கரைசல், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும். சுவையான வாசமான மொச்சை கருவாட்டு குழம்பு தயார்.
Tags: