சூப்பரான பயறு வடை செய்வது எப்படி?





சூப்பரான பயறு வடை செய்வது எப்படி?

நம்முடைய வீடுகளில் சமையலுக்காக பல்வேறு வகையான பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் இவை முக்கிய பொருளாக இருக்கின்றன. 
சூப்பரான பயறு வடை செய்வது எப்படி?
அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் பச்சை பயறு பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம். இது முங் பீன்ஸ் அல்லது கிரீன் கிராம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ப்ரோடீன், ஃபைபர் உள்ளிட்ட பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பருப்பு வகைகளில் ஒன்றாக இருக்கிறது இந்த பச்சை பயிறு. 
சுவையான ஸ்னாக்ஸ் முதல் சத்தான உணவுகள் மற்றும் சாலட்ஸ்கள் என பல உணவுகளை தாயரிப்பதில் பச்சை பயிறு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் பல இடங்களில் மழைக்காலம் முடிந்து விரைவில் குளிர்காலம் துவங்க இருக்கிறது. 

இதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கும் ஃபைபர் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக பச்சை பயிறு இருக்கிறது. 
ஃபைபர் சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. அதே சமயம் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தவிர இந்த பருப்பில் கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. 

இதன் காரணமாக இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற பருப்பாக பச்சை பயிறு இருக்கிறது. சரி இனி பச்சைப்பயறு பயன்படுத்தி சூப்பரான பயறு வடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தலாமா? டிப்ஸ்!
தேவையான பொருள்கள் :

பச்சைப்பயறு - ஒரு கப்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 3 பல்

கறிவேப்பிலை - 2 இணுக்கு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
பயறு வடை
பச்சைப் பயறை சுத்தம் செய்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பயறில் தண்ணீரை வடித்து விட்டு பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
ஆண்களால் பால் கொடுக்க முடியுமா? மார்பகங்களை பற்றி உண்மைகள் !
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுக்கவும். மாலை நேரத்தில் டீயுடன் சூடாகப் பரிமாற சுவையான, சத்தான பயறு வடை தயார்.
Tags: