இளம் வயதினர் அனைவருக்கும் எப்போதும் பிடிக்கின்ற குழங்கு உருளைக் கிழங்கு. மைதா மாவில் தான் புரோட்டா செய்து சாப்பிட்டி ருப்போம்.
உருளைக் கிழங்கு புரோட்டா
இப்போது வித்தியாசமாக உருளைக் கிழங்கு புரோட்டா செய்முறை களைப் பார்ப்போம்.

தேவையான பொருள் :

உருளைக் கிழங்கு நான்கு

மிளகாய்த்தூள்,

கொத்தமல்லித்தூள்,

சீரகத்தூள்,

பெருங்காயத்தூள்,

கோதுமை மாவு,

எண்ணெய்,

கொத்த மல்லித்தழை,

உப்பு

செய்முறை :
உருளைக் கிழங்கு நான்கை எடுத்து நன்றாக கழுவ வேண்டும். அவற்றைக் குக்கரில் நன்கு வேக வைக்க வேண்டும்.

வெந்த உருளைக் கிழங்கை எடுத்து தோலை உரித்து கழுவிய பின்னர் நன்றாக மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதனோடு தேவையான அளவு எடுத்து வைத்துள்ள மிளகாய்த் தூள், கொத்த மல்லித் தூள், பெருங்காயத் தூள்.

சீரகத்தூள், உப்பு ஆகிய வற்றை கலந்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் சடாயை வைத்துச் சூடான பின்னர் சிறிது எண்ணெயை ஊற்றி கொத்த மல்லித் தழையைப் போட வேண்டும்.
பின்னர் உருளைச் கிழங்கு கலவையைப் போட்டு உரிய முறையில் வதக்கி இறக்கி வைத்து ஆறவிட வேண்டும்.

பின்னர் சிறுசிறு உருண்டை களாக உருட்டிப் பச்சைக் கோதுமை மாவில் புரட்டி எடுத்து சப்பாத்திக் கட்டையால் வட்ட வடிவாக மெல்லி தாகத் தேய்த்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடாக்கி உருளைக் கிழங்குப் புரோட்டாவைப் போட்டு சுட்டு எடுத்தால் மணம் வீசும். புதுவகை புரோட்டா தயார். இனிசாப்பிட வேண்டியது தான்.