மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக் செய்வது எப்படி?





மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக் செய்வது எப்படி?

நீங்கள் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அப்படியா னால் காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக்
அதிலும் டயட்டில் ஓட்ஸை எடுத்து வந்தால், உடல் எடையானது விரைவில் குறைவதுடன், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.

தேவையான பொருட்கள்: 

மாதுளை - 1 பழம்

ஓட்ஸ் - 1/2 கப்

குளிர்ந்த பால் - 2 1/2 கப்

தேன் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு 2 நிமி டம் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் மாதுளையை சுத்தம் செய்து, அதன் விதையை தனியாக எடுத்து வைத் துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் மாதுளை, வறுத்த ஓட்ஸ் மற்றும் பால் ஊற்றி நன்கு அடித் துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் தேன் சேர்த்து ஒருமுறை அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமா றினால், சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக் ரெடி!
Tags: