அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி செய்வது எப்படி?

அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி செய்வது எப்படி?

எப்படி உடல் எடையைக் குறைக்க நிறைய மக்கள் நினைக்கி றார்களோ, அவர்களுக்கு இணையாக, எடையை அதிகரிக்க நினைக்கும் மக்களும் உள்ளனர்.
அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி
உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் தினமும் ஒரு டம்ளர் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தியைக் குடித்து வந்தால், நிச்சயம் அதிகரிக்க முடியும்.

தேவையான பொருட்கள்: 

அவகேடோ - 1 (கனிந்தது)

வாழைப்பழம் - 1 (கனிந்தது)

தேன் அல்லது சர்க்கரை - தேவையான அளவு

தயிர் - 1/2 கப்

பால் 1 கப்

செய்முறை: 
முதலில் அவகேடோ பழத்தினை இரண்டாக வெட்டி, சதைப்பகுதியை கரண்டி கொண்டு எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் வாழைப் பழத்தை துண்டுக ளாக்கிப் போட்டு, அத்துடன் தயிர், பால், சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!
Tags: