மதுரை அயிரை மீன் குழம்பு செய்வது எப்படி?

மதுரை அயிரை மீன் குழம்பு செய்வது எப்படி?

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. அயிரை மீன் குழம்பு என்று சொன்னாலே மதுரைக் காரர்கள் சப்புக் கொட்டுவார்கள். 
மதுரை அயிரை மீன் குழம்பு செய்வது எப்படி?
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மதுரை அயிரை மீன் குழம்பு என்று போர்டு வைத்து சாப்பாட்டு பிரியர்களை சுண்டி இழுப்பார்கள். இந்த மீன் கிடைப்பது அரிதானது என்பதால் விலையும் அதிகம். 

ஒரு கிலோ 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப் படுகிறது. ருசியான சத்தான இந்த மீனை வாங்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது ஊட்ட சத்து நிபுணர்களின் கருத்தாகும். 

அந்த மீனைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும். அப்படி என்னதான் அந்த மீனில் விசேஷம் என்று பலரும் பலரும் கேட்கலாம். 

அயிரை மீனில் உள்ள அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். அயிரை மீன்களில் அதிகளவு புரோட்டீன், ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் உள்ளன.
இந்த மீன் குழம்பு மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். உங்களுங்கு இந்த மீன் குழம்பை சுவைக்க ஆசையா? அப்படி யெனில் தொடர்ந்து படியுங்கள்.
தேவையான பொருட்கள்: 

அயிரை மீன் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 250 கிராம் (தோலுரித்தது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பூண்டு - 10 பற்கள்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 12/ டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

புளி - சிறிய

எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க) 

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் - 3
செய்முறை: 
மதுரை அயிரை மீன் குழம்பு செய்வது எப்படி?
முதலில் அயிரை மீனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் தேங்காய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மை யாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு,

வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
காதலிக்கும் மகளை கண்டிக்கலாமா? யோசித்து பாருங்கள் !
பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கி, பின் புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, உப்பு சுவை பார்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, பின் அதில் அயிரை மீனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்த மல்லியைத் தூவினால், அயிரை மீன் குழம்பு ரெடி!
Tags: