ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?

ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?

0
தென்னிந்திய சமயலறை களைப் பொருத்த வரை வெங்காயம் என்றாலே இரண்டு வகைகள் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கின்றன. 
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?
ஒன்று பெரிய வெங்காயம், மற்றொன்று சாம்பார் வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம். இந்த இரண்டைத் தவிர்த்து, சில சமயங்களில் அடர் சிவப்பில் சில வெங்காய வகைகள் சந்தைகளில் கிடைக்கின்றன.

அவை நம்மூர் வெங்காய வகைகளைக் காட்டிலும் மட்டமானவை என்றொரு கருத்து இங்கு நிலவுகிறது. 
நம்மைப் பொறுத்த வரை அடர் சிவப்பின்றி அளவான நிறத்தில் ஓரங்கள் காய்ந்து வெளிறிய நிலையில் இருக்கும் பெரிய வெங்காயங்களும், சின்ன வெங்காயங் களுமே சத்தானவை.

இந்த இரண்டு வகைகள் தவிர, இன்னும் பல விதமான வெங்காயங்கள் உலகச் சந்தைகளில் இடம்பெற்று வருகின்றன. 

முதலில் அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். பிறகு எந்த வெங்காயம் ஆரோக்யமானது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

வெங்காய வகைகள்..

மஞ்சள் நிற வெங்காயம் பர்கர் மற்றும் பீட்ஸாவின் மேற்புற டாப்பிங்குகளில் இந்த வகை வெங்காயம் தான் பயன்படுத்தப் படுகிறது. 

இவற்றைப் பச்சையாக உண்ணும் போது சற்றுக் காரமாக இருக்கலாம். எனவே லேசாக எண்ணெயில் வறுத்து உணவின் மேற் புறங்களில் சேர்க்கலாம்.

இனிப்பு வெங்காயம்

இனிப்பு வெங்காயம், நீங்கள் யூகித்தபடி, இனிப்புச் சுவையுடன் இருக்கும். அவை மற்ற வகைகளை விட குறைவான கந்தகத்தைக் கொண்டிருக் கின்றன, 
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?
எனவே இவற்றில் அதிக காரம் இல்லை. அவை சற்று வித்தியாசமான வடிவத்தையும் கொண்டுள்ளன, அதாவது வட்டமாக இல்லாமல் சற்றே தட்டையான ஓவல் வடிவம்.

சிவப்பு வெங்காயம்

இனிப்பு வெங்காய த்தைப் போல இது அத்தனை இனிமையாக இல்லா விட்டாலும், சிவப்பு வெங்காயமும் கொஞ்சமே கொஞ்சம் இனிப்புச் சுவை கொண்டது தான். 

எப்படி எனில், இனிப்பு வெங்காயம் தவிர்த்த ஏனைய பிற வெங்காய வகைகளைக் காட்டிலும் இவற்றில் அதிக சர்க்கரை இருக்கிறது. 
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?
எனவே இவை உருளைக் கிழங்கு சாலட்களிலும், டகோஸிலும் மிகச்சிறந்த காம்பினேஸானச் செயல் படுகின்றன. 

உதாரணத்திற்கு BBQ பீட்சாக்களில் இவை முதலிடம் வகிக்கின்றன. மேலும் இவை பச்சையாக சாப்பிட மிகவும் உகந்த வெங்காய வகைகளாகவும் திகழ்கின்றன. 

ஆனால் நீங்கள் சிவப்பு வெங்காயத்தை சமைக்க விரும்பினால், அவற்றை நாள்பட வைத்திருங்கள். வெங்காயம் நாள்பட நாள்பட காய்ந்தால் தான் அதற்குத் தனிச்சுவையும், தரமும் அதிகரிக்கிறது.
மற்ற எல்லா வெங்காய வகைகளைக் காட்டிலும் இது கிரில் சமையல் ஐட்டங்களில் மிகச்சிறப்பாக ஒத்துழைக் கிறது. இதிலிருக்கும் இனிப்புச் சுவை அதற்கு உதவுகிறது. 

அதனால் தான் இவை மஞ்சள் மற்றும் இனிப்பு வெங்காய வகைகளைக் காட்டிலும் சற்று வித்தியாசமான சுவையை வழங்குகிறது.

வெள்ளை நிற பெரிய வெங்காயம்
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?
இந்த வகை வெங்காயங் களைத் தான் நாம் தினமும் சமையலில் பொரியல், கூட்டு, ஆம்லெட் வகையறாக்கள் செய்யப் பயன்படுத்துகிறோம். இவற்றில் இனிப்புத் தன்மை குறைவு. காரம் சற்று தூக்கலாக இருக்கும்.

சின்ன வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம்..
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?
தென்னிந்திய சமையலில் இந்த சாம்பார் வெங்காயம் இல்லாவிட்டால் மணப்பெண் இல்லாத கல்யாண வீடு போலத் தான். ஒட்டு மொத்த சமையலுமே உவப்பில்லாமல் போய் விடும். 

இது மிக ஆரோக்ய மானது மட்டுமல்ல. சுவையிலும் இதற்குத் தனி இடம் உண்டு. இவற்றில் ஆண்ட்டி ஆக்ஸிடண்டுகள் அதிக மிருப்பதால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்புத் திறனை வழங்குவதில் வல்லவை யாகத் திகழ்கிறது. 
எனவே தான் வளரும் குழந்தை களுக்கு சின்ன வெங்காய த்தைப் பொடிப் பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிடத் தரச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

வெங்காயத்தாள் அல்லது பச்சை நிற வெங்காயம்
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?
சாலட்டுகள், பிரியாணி வகைகள், புலாவ் வகைகளில் இவற்றை நிச்சயம் சேர்க்கத் தான் வேண்டும். உணவுக்கு ஒரு ஸ்பெஷல் நிறத்தையும், மணத்தையும், தருவதில் இவை வல்லைவை.

தட்டையான சிபோல்லினி வெங்காயம்
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?
இவற்றை அப்படியே தோல் எடுத்து விட்டு முழுதாக எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம். சுவை தூக்கலாக இருக்கும். 5 நட்சத்திர உணவு விடுதிகளில் இவை பெரிதும் பயன்பாட்டில் இருக்கின்றன. 

கூடுதல் இனிப்புச் சுவை கொண்டது. எல்லா உணவு வகைகளு டனும் சேர்த்து உண்ணத் தக்கது.

வெள்ளை மற்றும் சிவப்பு நிற முத்து வெங்காயம்

வடிவத்தில் தான் வித்தியாசமே தவிர, இந்த வெங்காயமும் அனைத்து வகை சூப்புகள், குழம்பு வகைகள், பொரியல்கள், மேலை நாட்டு உணவு வகைகள், வட இந்திய உணவு வகைகள் என அனைத்திலுமே முக்கிய பங்கு வகிக்கிறது.
சரி இனி எந்த வெங்காயம் உடலுக்கு ஆரோக்யமானது?

அதற்கான காரணம் என்ன என்பதையும் பார்த்து விடலாம். உலகம் முழுவதுமே பொதுவாக சிவப்பு நிற சின்ன வெங்காய வகை தான் மற்ற பிற வெங்காய வகைகளைக் காட்டிலும் மிகவும் ஆரோக்யமானது என்று நம்பப் படுகிறது.

ஏனெனில்,
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?
இந்த வகை வெங்காயங் களில் விட்டமின்கள், மினரல்கள் அதிக மிருப்பதோடு, இவற்றில் கொழுப்புச் சத்து மிகக்குறை வான அளவில் இருக்கும். 

இவை மிகச்சிறந்த ஆண்ட்டி பயோடிக் மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் இயல்பு கொண்டவையாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டக்கூடிய காரணிகளாகவும் செயல்படுகின்றன. 

கேன்சரை எதிர்க்கும் காரணிகளும் சின்ன வெங்காயத்தில் உண்டு. தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொண்டோ மெனில் தூக்க மின்மை தொடர்பான அனைத்து குறைபாடு களையும் களைய முடியும். 

வெங்காயத்தி லிருக்கும் குரோமியச் சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்த உதவுகிறது. பச்சை வெங்காயம் கரிம சல்பர் கலவை மிக அதிக அளவில் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
வெங்காயத்தில் இருக்கும் ஃப்ளேவனாய்டுகள் ரத்தத்தின் அடர்த்தி குறையாமல் காக்க உதவுகிறது. உடல் உள்ளுறுப்பு களில் காயங்களோ, நோய்த் தொற்றுகளோ ஏற்படாமல் காக்க வெங்காயம் உதவுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)