அரிசி மாவு கொழுக்கட்டை செய்முறை !

அரிசி மாவு கொழுக்கட்டை செய்முறை !

தேவையானவை:
பச்சரிசி மாவு- 1 டம்ளர்

உப்பு- தேவையான அளவு

தேங்காய்- 1/4 மூடி

காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

மிளகாய்வற்றல்- 1

பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு

பாசிப்பருப்பு- ஒரு கைப்பிடி
 அரிசிமாவு கொழுக்கட்டை
செய்முறை:

1. அரிசி மாவைச் சிவக்க வறுக்கவும்.

2. தண்ணீரைச் (ஒன்றுக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் கணக்கு, ஆனால் கண்ணளவில் பார்த்து பார்த்தே சேர்க்க வேண்டும். 

தண்ணீர் அதிகமாகச் சுட வைத்துக் கொண்டாலும் சிறிது சிறிதாகவே ஊற்றி வர வேண்டும்) சுட வைத்து உப்பு சேர்த்து வதக்கிய மாவில் சேர்க்கவும்.

3. தாளிசப் பொருட்களைச் சேர்த்து (பாதியை இப்போதும் கொழுக்கட்டைகள் வெந்து வந்த பிறகு மீதியைச் சேர்க்க வேண்டும்) மாவில் கிளறவும்.

4. மாவை உருண்டைகள் பிடித்து இட்லித் தட்டுகளில் பரப்பி வேக விடவும்.
5. ஒரு கைப்பிடி பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

6. கொழுக்கட்டைகள் வெந்து வந்ததும் தாளிசப்பொருட்களின் பாதியையும் வறுத்தப் பாசிப்பருப்பையும் தேங்காய்த் துருவலையும் போட்டுக் கலந்து கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.

7. சுவையான அரிசிமாவு கொழுக்கட்டைக்குத் தக்காளிச் சட்னி, சாம்பார், மிளகாய்ப் பொடி, தொக்கு வகைகள் சிறந்த இணைகள்.
Tags: