கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி?





கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி?

ரவையில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஒருபுறம் மிகவும் சுவையாகத் இருந்தாலும், மற்றொரு புறம் அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். 
கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி?
சிலர் காலை உணவுகளில் மட்டும் அல்ல இனிப்பு வகைகளில் கூட இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். கோதுமையில் ஆரோக்கியமான கார்போ ஹைட்ரேட் உள்ளது, இது உடலின் சக்தியை அதிகரிக்க வல்லது. 

ரவை கோதுமை யிலிருந்து தயாரிக்கப் படுவதால் இது உடலின் சத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் ரவையை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரவையில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. 

இதனால் உடலில் அதன் குறைபாட்டைத் தடுக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. 

எனவே, உங்களுக்கு இரத்த சோகை பிரச்சனை இருந்தால், ரவையால் செய்யப்பட்ட உணவு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ரவை ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையானவை :

கோதுமை ரவை - 1 கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் பொடி - சிறிதளவு

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி - 1 துண்டு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 1

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 இணுக்கு

கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை :
 கோதுமை ரவா உப்புமா செய்வது
கோதுமை ரவையைச் சிவக்க வறுத்துத் தனியே தாம்பாளத்தில் ஆற விடவும். தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு அதிலேயே நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்கா யத்தைப் போட்டுச் சிவக்க வதக்கவும். 

அடுத்துத் தக்காளி போட்டு வதக்கவும். பிறகு 2 டம்ளர் தண்ணீர் விடு சுட வைக்கவும். தண்ணீர் கொதித்துக் காய்கறி வெந்து வரும் போது வறுத்து ஆற விட்ட கோதுமை ரவையை அடிப் பிடிக்காமல் கிளறி வரவும்.
தீயைக் குறைத்து வைத்து, 5 நிமிடங்கள் வேக விட சுவையான, சத்துள்ள கோதுமை ரவை தயார். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். சட்னியோடு பரிமாற ருசி அள்ளும்.
Tags: