மாமிடிகாயா மென்தி பச்சடி செய்வது எப்படி?





மாமிடிகாயா மென்தி பச்சடி செய்வது எப்படி?

1

தேவையானவை :

மாங்காய் துண்டுகள் - 2 கப்

மிளகாய்த் தூள் - 2 மேஜைக் கரண்டி

வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி

கடுகுத் தூள் - 1

நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்

பெருங்காயத் தூள் - 1 மேஜைக் கரண்டி

உப்பு - தேவையான அளவு

கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?

செய்முறை :

மாமிடிகாயா மென்தி பச்சடி செய்வது எப்படி?

மாங்காய் துண்டுகளை அகலமான பாத்திரத்தில் போட்டு வைக்கவும். வெந்தயத்தூளை வறுத்துக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தீயை அணைத்து விட்டு, பெருங்காயத்தூள் போட்டு ஆற விடவும்.

எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !

மாங்காய் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், உப்புத்தூள், கடுகுத்தூள், வெந்தயத்தூள் இவற்றைப் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

அதன்பின் பெருங்காயத்தூள் கலந்த எண்ணெய்யை சேர்த்து மறுபடியும் நன்றாக கிளறிய பின் பாட்டிலில் எடுத்து வைத்து, தேவையான போது பயன்படுத்தவும்.

Tags:

Post a Comment

1Comments

  1. சூப்பர் டிஷ், மாங்காய் வைத்து செய்வது அருமையாக இருக்கும்....

    ReplyDelete
Post a Comment