கேரளா ஸ்பெஷல் மக்ரோனி சர்க்கரை வரட்டி எப்படி செய்வது?





கேரளா ஸ்பெஷல் மக்ரோனி சர்க்கரை வரட்டி எப்படி செய்வது?

0

தேவையான பொருட்கள் :

2 கப் - மக்ரோனி

1 கப் - வெல்லம்

1/2 ஸ்பூன் - சுக்குத்தூள்

1/2 ஸ்பூன் - ஏலக்காய்த்தூள்

6 டேபிள் ஸ்பூன் - அரிசி மாவு

3 டேபிள் ஸ்பூன் - மைதா மாவு

பொரிக்க தேவையான அளவு - எண்ணெய்

செய்முறை :

கேரளா ஸ்பெஷல் மக்ரோனி சர்க்கரை வரட்டி

பாஸ்தாவை கொதிக்கும் வெந்நீரில் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, முக்கால் பாகம் வேக வைத்து, நீரை வடித்து விட்டு சிறிதளவு பச்சை தண்ணீரில் காட்டி, நன்கு வடித்து எடுத்து கொள்ள வேண்டும். 

அதில் அரிசி மாவையும் மைதா மாவையும் சேர்த்து, உதிரி உதிரியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனை சூடாக்கிய எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

வேறொரு கடாயில் வெல்லம் சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து கல்லை வடிகட்டி, 

அதில் ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து ஒரு பாகு பதத்திற்கு காய்ச்சிய பின்,பொரித்து வைத்த மேக்ரோனி சேர்த்து கிளற வேண்டும்.

ரெட் வெல்வெட் குக்கீஸ் செய்வது எப்படி?

இப்போது அரிசி மாவு தூவி, நன்கு கிளறி எடுத்தால் மேக்ரோனி சர்க்கரை வரட்டி தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)