ரெட் வெல்வெட் குக்கீஸ் செய்வது எப்படி?





ரெட் வெல்வெட் குக்கீஸ் செய்வது எப்படி?

0

பலரும் ரெட் வெல்வெட் கேக்கை சுவைத்திருப்போம். ஆனால் ரெட் வெல்வெட் குக்கீஸ் சாப்பிடவில்லை எனில், அதை வீட்டிலேயே செய்து சுவையுங்கள். 

ரெட் வெல்வெட் குக்கீஸ் செய்வது
அதுவும் உங்கள் வீட்டில் ஓவன் இருந்தால், இதை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். இதை செய்வது மிகவும் எளிது. 

இப்போது ரெட் வெல்வெட் குக்கீயை எப்படி வீட்டிலேயே செய்வதென்று காண்போம். 

தேவையான பொருட்கள்:

சர்க்கரையில்லா கொக்கோ பவுடர் - 3 /2 டேபிள் ஸ்பூன்

மைதா - கப்

உப்பு - /4 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - /4 டீஸ்பூன்

வெண்ணெய் - /3 கப்

நாட்டு சர்க்கரை - /2 கப்

வென்னிலா எசன்ஸ் - டீஸ்பூன்

சாக்லேட் சிப்ஸ் - 2/3 கப்

பிங்க் நிற கேசரி பவுடர் - டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 2 /3 டேபிள் ஸ்பூன்

முட்டை - 2

பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன்

பால் - டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதா, கொக்கோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ரெட் வெல்வெட் குக்கீஸ்
பின் ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு ஹேண்ட் மிக்ஸர் பயன்படுத்தி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 

பின் அதில் நாட்டுச் சர்க்கரை, சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ளவும்.

பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, பால் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து ஹேண்ட் மிக்ஸர் பயன்படுத்தி மீண்டும் அடித்துக் கொள்ளுங்கள்.

அதன் பின் பிங்க் நிற கேசரி பவுடரை சேர்த்து நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு மைதா கலவையை அடித்து வைத்துள்ள வெண்ணெய் கலவையுடன் சேர்த்து எலக்ட்ரிக் மிக்ஸர் பயன்படுத்தி, குறைவான வேகத்தில் கலந்து கொள்ளவும். 

அதன் பின் ஒரு கப் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கிளறி, அந்த பௌலை பிளாஸ்டிக் கவரால் மூடி, ஃப்ரிட்ஜ்ஜில் ஒரு மணிநேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் வைத்து எடுக்க வேண்டும்.

பின்பு ஓவனை 175 டிகிரி C-யில் சூடேற்றிக் கொள்ளுங்கள். பின் பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் ஷீட்டை விரித்து, 

அதில் தயாரித்து வைத்துள்ள கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, குக்கீஸ் போன்று தட்டையாக தட்டி, ஒவ்வொரு குக்கீஸிற்கும் இடையே சிறு இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம்... இல்லையேல் முடக்கம் !

இறுதியில் பேக்கிங் ட்ரேயை ஓவனில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும். 

இப்போது வேண்டுமானால் சிறிது சாக்லேட் சிப்ஸ் தூவி, நன்கு குளிர்ந்த பின் பரிமாறினால், சுவையான ரெட் வெல்வெட் குக்கீஸ் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)