பீட்ரூட் ஸ்பைசி டிலைட் செய்வது எப்படி?

0

தேவையான பொருட்கள் :

2 கப் - இட்லி மாவு

1 - பீட்ரூட்

1/4 ஸ்பூன் - சோம்பு

4 பல் - பூண்டு

1/4 கப் - பாசிப்பருப்பு

4 - காய்ந்த மிளகாய்

1/2 ஸ்பூன் - சீரகம்

1/2 கப் - சேமியா

1/4 கப் - தேங்காய்

1 ஸ்பூன் - தனியா

உப்பு - தேவையான அளவு

வாட்ஸ்அப்புக்கு போட்டியாக இந்திய அரசின் சாண்டஸ் டவுன்லோடு செய்வது எப்படி?

செய்முறை :

பீட்ரூட் ஸ்பைசி டிலைட் செய்வது

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்து, அதனுடன் சேமியா மற்றும் பாசிப்பருப்பையும் நெய் ஊற்றி, பொன்னிறமாக வறுத்து சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து கலந்து கொள்வோம். 

கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு, வதங்கியவுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா சேர்த்து வதக்கி, 

ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக, அரைத்து எடுத்துக் கொள்வோம். இதனை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்கு கலந்து கொள்வோம்.

ஒரு ஹார்ட் வடிவ கேக் டின்னில் நெய் தடவி, அதில் கலந்து வைத்த மாவை ஊற்றி, அதனை இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டினை வைத்து, 

அதன் மீது ஹாட் வடிவ டின்னை வைத்து மூடி வேக வைக்க வேண்டும். ஒரு கத்தியை நடுவில் குத்தி பார்த்தால் மாவு ஒட்டாமல் வரும்.

அப்படி இருந்தால் அடுப்பை அணைத்து, சிறிது நேரம் கழித்து டின்னை திருப்பி எடுத்தால் கேக் மாதிரி ஒட்டாமல் வரும். இப்பொழுது நமது பீட்ரூட் ஸ்பைசி டிலைட் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)