குழந்தைகள் விரும்பும் க்ரீமி கேரட் சூப் செய்வது எப்படி?





குழந்தைகள் விரும்பும் க்ரீமி கேரட் சூப் செய்வது எப்படி?

0
குளிர் காலத்தில் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. அதிலும் கண்களின் ஆரோக்கியத்துக்கு கரோட்டின் நிறைந்த கேரட்டைக் கொண்டு சூப் தயாரித்துக் குடிப்பது இன்னும் நல்லது. 
குழந்தைகள் விரும்பும் க்ரீமி கேரட் சூப் செய்வது
இந்த கேரட் சூப் குடிப்பதால் கண்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.  கீழே க்ரீமி கேரட் சூப்பை எப்படி செய்வதென்று கொடுக்கப் பட்டுள்ளது. 

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

இந்த ஸ்டைல் கேரட் சூப் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடியவாறு இருக்கும். கீழே கொடுக்கப் பட்டுள்ளதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள்: 

கேரட் - 3 (பொடியாக நறுக்கியது) 

பால் - 1/4 கப் 

தண்ணீர் - 1 கப் + 1/2 கப் கேரட்டை வேக வைப்பதற்கு 

பூண்டு - 5 பல் 

பட்டை - 1 

கிராம்பு - 2 

பிரியாணி இலை - 1 

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 

கரம் மசாலா - 1 சிட்டிகை 

எண்ணெய் - 1 டீஸ்பூன் 

க்ரீம் - 2 டீஸ்பூன் 

வெண்ணெய் - 1 டீஸ்பூன் 

உப்பு - சுவைக்கேற்ப 

செய்முறை: 
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். 

பின் அதில் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், கரம் மசாலா, கேரட், சேர்த்து பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வதக்கவும். அதன் பிறகு அதில் கேரட் மூழ்கும் அளவில் நீர் ஊற்றி, அதை நன்கு வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். 

பிறகு அதை எடுத்து மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அரைத்த கேரட் பேஸ்டை அதில் போட்டு நீர் ஊற்றி கட்டி இல்லாமல் கிளறி விடுங்கள். 

சூப் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பால், 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் க்ரீம் சேர்த்தால், க்ரீமி கேரட் சூப் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)