கேரட் - முட்டை பொரியல் செய்வது எப்படி?

கேரட் - முட்டை பொரியல் செய்வது எப்படி?

0
கண்களைக் கவரும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் கேரட், பார்ப்பதற்கு மட்டுமல்ல வெறுமனையாக சாப்பிடுவதற்கும் சிறந்தது. இது, சுவைக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்திலும் சிறந்தது. 
கேரட் – முட்டை பொரியல்

இது உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியமான கண்பார்வையை பெறுவது வரை எக்கச்சக்கமான சத்துக்களை வழங்குகிறது. 

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். 
அதில், உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஏனென்றால், சர்க்கரை அளவை கேரட் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதில், உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய செல்களை உருவாக்குகிறது.  

இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். 

இதனால், எளிமையாக உடல் எடையை குறைக்கலாம். கேரட் பொரியலில் தேங்காய்ப்பூ அல்லது வெந்த பருப்பு சேர்ப்போம். அதற்கு பதிலாக இதில் முட்டையை ஊற்றி செய்வதால் சுவையாக இருக்கும். 

முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. 

அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. கூடுதலாக, முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் உள்ளன. 

ஒரு முட்டையைச் சரியாக வேகவைக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். இதற்கு மேல், முட்டையை அதிக நேரம் வேக வைக்கக் கூடாது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முட்டையை வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். 
தேவையானப் பொருள்கள்:

கேரட் – 1

சின்ன வெங்காயம் – 5

பச்சை மிளகாய் – 1

மஞ்சள் தூள் – சிறிது

முட்டை – 2

உப்பு – தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்

கடுகு

உளுந்து

சீரகம்

கடலை பருப்பு

கறிவேப்பிலை

செய்முறை :

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டை துருவி கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை 

ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி விடவும். இரண்டும் சேர்ந்தார் வெந்து பூப்போல் வந்ததும் இறக்கவும்.

சுவையான கேரட் – முட்டை பொரியல் ரெடி. இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)