குடவாழை அரிசி பொங்கல் செய்வது எப்படி?





குடவாழை அரிசி பொங்கல் செய்வது எப்படி?

குடவாழை என்றழைக்கப்படும் இந்நெல் இரகம், சிவப்பு நிற நெல்லையும், சிவப்பு நிற அரிசியையும் உடையது. புரதம் (Protein), நார் (Fiber), தாது (Minerals) மற்றும் உப்புச்சத்து (Salt) இந்த அரிசியில் அதிகம் உள்ளது. 
குடவாழை அரிசி பொங்கல் செய்வது எப்படி?
சர்க்கரை (Sugar level) அளவை குறைத்து உடலை உற்சாகமாக (Active) வைக்க உதவுகிறது. அனைத்துப் பலகாரங்களைச் செய்வதற்கும் ஏற்ற நெல் (அரிசி) இரகமான இது, பழைய சாதம் அல்லது நீராகாரமாக வயலுக்கு எடுத்துச் செல்வார்கள். 

காலை, மதியத்துக்கு இடையே பகல் உணவாகப் பழைய சாதத்தைச் சாப்பிட்டு விட்டு, கொஞ்சமும் சோர்வு அடையாமல் வேலை செய்யும் தெம்பை தரக்கூடியது. 

இத்தகைய ஆரோக்கியம் நிறைந்த குடவாழை அரிசி கொண்டு குடவாழை அரிசி பொங்கல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:

குடவாழை அரிசி - கால் கிலோ

கரும்பு வெல்லம் - 200 கிராம்

பச்சை பயிறு - 100 கிராம்

மாதுளம் பழம் முத்துக்கள் - 100 கிராம்

செய்முறை:

கரும்பு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும். குடவாழை அரிசியை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பச்சை பயிரை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

பச்சைப் பயிறு, குடவாழை அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதனுடன் பொடித்த கரும்பு வெள்ளத்தை சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும். 

விசில் போனவுடன் மூடியை திறந்து மாதுளம் பழம் முத்துக்களை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். சூடான சுவையான குடவாழை அரிசி பொங்கல் ரெடி !
Tags: