வெஜ் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?

வெஜ் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?

0

சப்பாத்திகள் பெரும்பாலானோரால் விரும்பி உண் ணப்படும்  முக்கியமான காலை மற்றும் இரவு நேர உணவு. 

வெஜ் சப்பாத்தி ரோல்

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். 

பஞ்சாபியர்கள் சப்பாத்தியையே வித விதமாக செய்து உண்பார்கள். சப்பாத்திகளை வழக்கமாக உண்பவர்களுக்கு ஒரு சேஞ்சுக்காக வெஜ் சப்பாத்தி ரோல் ஆக செய்து கொடுக்கலாம். 

இவை அலுவலகங்களுக்கோ அல்லது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் செய்து கொடுத்து அனுப்புவதற்கு உகந்தது. 

குறிப்பாக சர்க்கரை வியாதியால் அவதிப்படும் நபர்களுக்கு மருத்துவர்கள் இரவு நேரங்களில் சப்பாத்திகளை உண்ண அறிவுறுத்துவார்கள். 

சப்பாத்தி வெஜ் ரோலில் காய்கறிகளையும் சேர்த்து செய்வதினால் இவை மேலும் சத்தானதாகின்றன.

தேவையானவை : 

கோதுமை மாவு - 2 கப்,

பெரிய வெங்காயம் - 2,

இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,

குடைமிளகாய் - 1,

கேரட் - 2,

முட்டைகோஸ் - சிறிது,

உருளைக்கிழங்கு - 1,

வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,

சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்,

தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன். 

உப்பு - தேவைக்கு,

செய்முறை : 

கோதுமை மாவை பிசைந்து அரை மணி நேரத்திற்கு நன்றாக ஊற வைத்து கொள்ளவும். 

வெங்காயம், குடைமிளகாய், கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 

கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி - பூண்டு விழுதை போட்டு சிவந்ததும், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். கடைசியாக சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளவும். 

மாவை சரிசம உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். 

ஒவ்வொரு சப்பாத்திக்கு உள்ளேயும் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து ரோல் செய்யவும். நடுவில் கட் செய்து தக்காளி கெட்ச்சப்புடன் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)