நாம் சாதரணமாக வெண்பொங்கலில் மிள்கு சீரகத்தினை முழுதாக தாளித்து சேர்ப்போம். 
வரகரிசி மிளகு பொங்கல் செய்வது எப்படி?
இந்த ஸ்பெஷல் கோவில் வெண்பொங்கலில் மிள்கு சீரகத்தினை கரகரப்பாக பொடித்து தாளித்து சேர்ப்பார்கள்.

அரிசிக்கு பதில் இந்த பொங்கலை வரகரிசியில் மற்ற சிறுதானியங்களிலும் செய்யலாம். 
தே.பொருட்கள்.:

வரகரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/4 கப்

நீர் - 3 1/2 கப்

உப்பு- தேவைக்கு

தாளிக்க.:

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 10

மிளகு + சீரகம் - தலா 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை.:
வரகரிசி + பாசிப்பருப்பு இவற்றை கழுவி 3 1/2 கப் நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு சேர்த்து குக்கரில் 3-4 விசில் வரை வேக வைக்கவும். 
வெந்ததும் நன்கு மசித்துக் கொள்ள்வும். மிளகு + சீரகத்தினை கரகரப்பாக பொடிக்கவும். 

பின் நெய்யில் முந்திரி + பொடித்த மிளகு சீரகம் + பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சேர்க்கவும்.