என்னென்ன தேவை?
தோல் சீவி பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
மோர் - 200 மி.லி.,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
சீரகம் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வாழைத்தண்டை 100 மி.லி. மோர், 100 மி.லி. தண்ணீரில் கலந்து ப்ளெண்டர் அல்லது மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி,
மீதியுள்ள மோர், மிளகுத்தூள், சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து மேலே நறுக்கிய கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.