பிங்க் குளோரி குல்கந்து ஷேக் தயார் செய்வது எப்படி?





பிங்க் குளோரி குல்கந்து ஷேக் தயார் செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

ரோஜா பூ இதழ்கள் - ஒரு கைப்பிடி,
சூடான தண்ணீர் - 1/2 கப்,

கற்கண்டு - 4 டீஸ்பூன்,

கிர்ணிப்பழ விதை, பூசணி விதை - தலா 1 டீஸ்பூன்,

சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்,

இடித்த ஏலக்காய் - 1,

சீவிய பாதாம் - 1 டீஸ்பூன்,

குங்குமப்பூ - 1 சிட்டிகை,

காய்ச்சி ஆற வைத்த பால் - 1 பெரிய டம்ளர்.
தினமும் உணவில் ஊறுகாயை சேர்த்தால் என்னென்ன ஆபத்து !
எப்படிச் செய்வது?
ரோஜா இதழ்களை சூடான தண்ணீரில் ஊறவைக்கவும். கிர்ணி, பூசணி விதைகளையும் தனித்தனியாக ஊற வைக்கவும். ஊறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். 
மாத்திரைகளை டீ காபியில் போட்டு விழுங்கினால் என்னாகும் தெரியுமா? 
இத்துடன் பால் சேர்த்து கலந்து வடிகட்டி, ஏலக்காய், கற்கண்டு, சோம்பு தூள் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும், 

பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி ரோஜா இதழ், பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும். விரும்பினால் தேன் சேர்க்கலாம்.
Tags: