ஸ்பெஷல் மசாலா செய்வது எப்படி?





ஸ்பெஷல் மசாலா செய்வது எப்படி?

0
டீ சுவைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். சிலர் சாப்பாடு கூட இல்லாமல் இருந்து விடுவர் ஆனால் டீ அருந்தாமல் இருக்க முடியாது. 
ஸ்பெஷல் மசாலா செய்வது எப்படி?
தண்ணீர், பால் சேர்க்கும் விகிதம் தான் டீயின் சுவையை தீர்மானிக்கிறது. டீயில் எண்ணற்ற வகைகள் உள்ளது, இஞ்சி டீ, புதினா டீ, க்ரீன் டீ என வரிசையாக கூறலாம். 

ஆனால் என்றும் மக்களை கவர்வதில் மசாலா டீ முக்கிய பங்கு வகுக்கிறது.மசாலா டீ உடலுக்கு ஆரோக்கியமானது. 

அதில் பயன் படுத்தப்படும் ஏலக்காய், கிராம்பு, பட்டை நோய் எதிர்புச் சக்தியை அதிகரிக்கும். ஏதேனும் நோய் தொற்று இருந்தாலும் அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது. 

குறிப்பிட்ட மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த டீ சுவை மட்டுமின்றி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஏனெனில் இதில் ஏலக்காய் மற்றும் இலவங்கப் பட்டையின் வாசனையும், ஜாதிக்காயின் சுவையும் நிறைந்துள்ளது. 

இந்த மசாலாவை நாம் வீட்டிலேயே தயாரித்து பாட்டிலில் அடைத்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.அதே போல் இஞ்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கக் கூடியது. 

இதனால் உடல் வலி, தலை வலி போன்றவை கட்டுப் படுத்தப்படும். வலி நிவாரணியாகச் செயல்படும்.

தேவையான பொருட்கள்

ஏலக்காய் - 5

பட்டை - 1

சர்க்கரை - 4

பால் - 1 கப்

தண்ணீர் - 4 கப்

மிளகு - 1

கிராம்பு - 4

டீ தூள் - 2 மேசைக் கரண்டி

காய்ந்த இஞ்சிப் பொடி - 1 மேசைக் கரண்டி

கிரீன் டீ இலைப் பொடி - 1/2 மேசைக் கரண்டி

செய்முறை :

ஆரம்பிக்கும் முன் மசாலாக்கள் அனைத்தை யும் மிக்ஸியில் மைய அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். அடுத்ததாக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 
பொங்கி வந்ததும் டீ தூள்  கிரீன் இலைப் பொடி சேர்த்துக் கலக்கவும். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி போட்டு நன்குக் கொதிக்க விடவும். கொதித்ததும் சர்க்கரை சேர்த்து 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும். 

இறுதியாக இஞ்சிப் பொடி சேர்த்துக் கலக்கவும். அதோடு பாலும் சேர்த்துக் கலக்கிக் கொதிக்க விடவும். 
பால் பொங்கி வந்ததும் தட்டு போட்டு மூடி இரண்டு நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங் களுக்குப் பின் அடுப்பை அனைத்து வடிக் கட்டவும். சுவையான மசாலா டீ தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)