மட்டன் சுடுகறி குழம்பு செய்வது | Mutton baked broth Recipe !





மட்டன் சுடுகறி குழம்பு செய்வது | Mutton baked broth Recipe !

0
இந்த வகை குழம்பு கொங்கு பகுதியில் வசிக்கும் முதலியார் சமூகத்து மக்கள் வீட்டில் இவ்வகை உணவு மிகவும் பிரசித்தம். குறிப்பாக இவ்வகை உணவு பெருந்துறை, குன்னத்தூர், கோபிசெட்டி பாளையம், சீனாபுரம், பவானிசாகர், பண்ணாரி போன்ற ஊர்களில் இவ்வகை உணவு மிகவும் பிரபலம். 
மட்டன் சுடுகறி குழம்பு செய்வது

தேவையான பொருட்கள் : 

மட்டன் எலும்புடன் 1 கிலோ 

வெங்காயம் அரை கிலோ 

தக்காளி பெரிசு 3 

பூண்டு 15 பல் 

காஞ்ச மிளகாய் 10 காரம் அதிகம் வேண்டு பவர்கள் அதிகம் சேர்த்து கோங்க 

எண்ணை 2 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் சிறிது 

உப்பு தேவையான அளவு 

பட்டை, லவங்கம், அன்னசிபூ சிறிதளவு

செய்முறை : 

1.மட்டனை நன்கு சுத்தம் பண்ணி முழ்கும் அளவு நீர் விட்டு மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும் .. 

2.பட்டை லவங்கம் அன்னசிபூ .. பாதியை சேர்க்கவும் . 

3.காஞ்ச மிளகாய் கிள்ளி விதை நிக்கிவிட்டு அதையும் சேர்க்கவும் . 

4.வெங்காயம் சற்று பெரியதாக நறுக்கி சேர்க்கவும் . 

5. பூண்டு தோல் உரித்து முழுவதாக சேர்க்கவும் ... 

6.பின் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி வெக விடவும். 

7. கறி முக்கால்வாசி வெந்ததும் நீரை தனியே வடிகட்டி வைக்கவும் . 

8. வேறு பாத்திரத்தை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்த உடன் மீதம் உள்ள பட்டை லவங்கம் அன்னசிபூ போட்டு வெடிக்க விட்டு . 

9.பொடியாக நறுக்கிய தக்காளியை போடு வதக்கவும் . 

10.தக்காளி சுருண்டு வந்தவுடன் வடிகட்டி வைத்த கறியை போட்டு வதக்கவும் . 

11. தொடர்ந்து கிளறாமல் கொஞ்சம் பிடிக்க விட்டு ,பிடிக்க விட்டு ,வதக்கவும் . 

12.சுடு வாசனை கொஞ்சம் குழம்பில் ஏறனும். 

13.வெங்கயம், பூண்டு ..இரண்டும் குழைந்து சுருண்டு வரும் போது வடித்த நீரை கறியில் சேர்த்து இரண்டு கொத்தி விட்டு இறக்கவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)