தேவையான பொருள்கள் : - 
கடலை மாவு - 200 கிராம், 

நறுக்கிய முந்திரிப் பருப்பு - 30, 

பச்சை மிளகாய் - 1, 

கொத்த மல்லித்தழை - 4 டேபிள் ஸ்பூன், 

தண்ணீர் - 300 மி.லி., 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், 

புளி கரைசல் - 1 டீஸ்பூன், 

உப்பு - தேவைக்கு, 

சர்க்கரை - 1/2 டீஸ்பூன், 

எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் + பொரிக்க 200 மி.லி.
செய்முறை : -
கடலை மாவு கார பர்பி
கடலை மாவு, முந்திரிப் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், புளிக்கரைசல், கொத்த மல்லித்தழை, உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும். 
5 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி கடலை மாவு கலவையை ஊற்றி 15 நிமிடங்கள் இடைவிடாமல் கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைத்து இறக்கவும்.

குழித்தட்டில் 1 டீஸ்பூன் எண்ணெய் தடவி கடலை மாவு கலவையை ஊற்றி சரிசமமாக பரத்தி விடவும். ஆற விட்டு சதுரங்களாக நறுக்கவும். 
பொரித்தெடுக்க எண்ணெயை சூடாக்கி பர்பியை பொன்னிறமாக பொரித்தெடுத்து, தேங்காய் இல்லாத பச்சை சட்னி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.