சூப்பரான மிளகு சிக்கன் டிக்கா செய்வது எப்படி?





சூப்பரான மிளகு சிக்கன் டிக்கா செய்வது எப்படி?

0
சிக்கனை தொடர்ந்து சாப்பிடுவதன் மற்றொரு பக்க விளைவு எடை அதிகரிப்பு. சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், ஃப்ரைட் சிக்கன் மற்றும் பல சுவைகளில் அதை சாப்பிட்டாலும் எடையை அதிகரிக்கும். 
மிளகு சிக்கன் டிக்கா
எனவே உடல் எடையில் அக்கறை செலுத்துபவர் எனில் சிக்கனை எப்போதாவது எடுத்துக்கொள்வது நல்லது. 

ஆனால் வழக்கமாக சாப்பிடுவது நிச்சயமாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். சிக்கன் டிக்கா இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு ரெஸ்டாரன்ட் உணவு.

சிக்கன் டிக்கா என்பது எலும்பில்லாத கோழித் துண்டுகள், மசாலா கலந்த தயிரில் மாரினேட் செய்யப்பட்டு, உலோகச் சூட்டில் திரிக்கப்பட்டு உயிருள்ள கரியில் சமைக்கப்படுகிறது. 
டிக்கா என்ற சொல் ஒரு துண்டு அல்லது துண்டாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. எனவே டிக்கா பல்வேறு வகையான உணவுகளுடன் செய்யப்படுவதை நீங்கள் காணலாம்.

தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ

மிளகு தூள் – 5 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது – 4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது – 4 டீஸ்பூன்

எண்ணெய் – தேவைக்கு

தயிர் – 200 மிலி

உப்பு – தேவைக்கு

எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை :
சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவிய பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு போட்டு முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் தயிரில் சிறிதளவு உப்பு, பச்சை மிளகாய் விழுது, பொடித்த மிளகு போட்டு கலக்கி ஏற்கனவே ஊற வைத்த சிக்கனில் போட்டு எல்லா வற்றையும் கலந்து மறுபடியும் முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கனை மட்டும் தனியாக எடுத்து வேக வைக்கவும்.

மூடி போட்டு மிதமான தீயில் எரிய விடவும். 5 நிமிடம் வெந்த உடன் சிக்கனை திருப்பி விட வேண்டும். பின்னர் சிக்கன் நன்றாக வேகும் வரை திருப்பி விட  வேண்டும்.
லேசாக எண்ணெய் விட்டாலே போதும் அதிக எண்ணெய் தேவை யில்லை. சிக்கன் நன்றாக வெந்த உடன் தட்டில் எடுத்து எலுமிச்சை சாறு விடவும். வாசனை சூப்பராக இருக்கும்.

சுவையான சிக்கன் டிக்கா ரெடி. இதை மைக்ரோவேவ் ஓவனிலும் செய்யலாம். வாணலியி லும் டீப் ப்ரை செய்யலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)