அருமையான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?





அருமையான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?

0
பழங்களும் காய்கறிகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை என்பது அறிந்ததுதான். ஆனால், அவற்றை தினசரி உணவில் எந்தளவுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பலரும் அறியாதது. 
அருமையான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?
நாளொன்றுக்கு இரண்டு கப் பழம், மூன்று கப் காய்கறி சாப்பிட்டால் இதயம் உள்ளிட்ட உடலின் முக்கியமான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். 

காய்கறிகளில் பல தாதுப்பொருட்களும் பல உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகையால் அடிக்கடி காய்கறிகளைக் கழுவக் கூடாது. 
புதிய காய்கறிகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றன. குளிர்சாதனைப் பெட்டி வைத்து இருப்பவர்கள் கூட மூன்று அல்லது ஐந்து தினங்களுக்கு மேல் போகாமல் வைத்து விட வேண்டும். 

மதியம் மீந்த சாதத்துடன், காய்கறிகள் சேர்த்து கட்லெட் செய்தால் அருமையாக இருக்கும். சரி, இப்போது அருமையான ரைஸ் வெஜிடபிள் கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:

அரிசி சாதம் - 1 கப்

உருளைக் கிழங்கு - 1

மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடை மிளகாய்) - 1 கப்

வெங்காயம் - 1

இஞ்சி - 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்த மல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அருமையான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். சாதத்தை வேக வைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும். 

காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக் கிழங்கு, சாதம், பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, 

மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள, மல்லித் தூள், சோள மாவு, கடலைமாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும். சூப்பரான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)