சுவையான வடை கறி செய்வது எப்படி?

சுவையான வடை கறி செய்வது எப்படி?

கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. 
சுவையான வடை கறி செய்வது எப்படி?
இதில் சீரியல்சை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் இருப்பதால் இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். 

குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் பாதிப்பு போன்றவை ஏற்படுவது குறையும். 
தினமும் கடலை பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து, சிறிது முளை கட்டியதும், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு குறையும். 

இதனால் உடல் ஆரோக்கியம் பெறும். சரி இனி கடலைப்பருப்பு கொண்டு சுவையான வடை கறி செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையானவை:

கடலைப்பருப்பு - 150 கிராம்,

பெரிய வெங்காயம் - 2 ,

பெரிய தக்காளி - ஒன்று,

கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,

இஞ்சி – பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 5,

லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2,

பிரிஞ்சி இலை - ஒன்று,

சோம்பு - ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்த மல்லி இலை - சிறிதளவு,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் - விருப்பத்திற்கேற்ப,

பொட்டுக் கடலை மாவு - 3 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சுவையான வடை கறி செய்வது எப்படி?
தக்காளியை நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். 

இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 

அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கிய வுடன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். 
பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து,  

நன்கு கொதி வந்தவுடன், வேக வைத்த கடலைப் பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும். 

கடைசியில் பொட்டுக் கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். இதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் பரிமாறலாம்.
Tags: