சைனீஸ் கிரில்டு சிக்கன் செய்வது எப்படி? / How to Make Chinese Grilled Chicken?





சைனீஸ் கிரில்டு சிக்கன் செய்வது எப்படி? / How to Make Chinese Grilled Chicken?

0
தேவையானவை

முழுக்கோழி - 1 கிலோ எடை

கோழியில் ஊற வைக்க:

காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1 - 2 டீஸ்பூன் (உங்க டேஸ்டுக்கு) 

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

எலுமிச்சை ஜூஸ் - 1 பழம்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் அல்லது சன் ஃப்லவர் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கு

செய்முறை :

சைனீஸ் கிரில்டு சிக்கன்
முதலில் ஃப்ரெஷ் அல்லது ஃப்ரோசன் எதுவாக இருந்தாலும் முதலில் கோழியை இரண்டு மூன்று தண்ணீர் விட்டு சுத்தமாக அலசிக் கொள்ளவும்.பின் தோலை உரித்துக் கொள்ளவும்.

ஏதும் உட்பகுதியில் கழிவு இருந்தால் நீக்கிக் கொள்ளவும். நன்கு அலசி எடுக்கவும். மசாலா ஏறுவதற்கு தக்கபடி கோழியில் சதைப் பிடிப்பான பகுதிகளில் லேசாக கீறி விட்டுக் கொள்ளவும்.

நன்கு மீண்டும் பளிச்சென்று அலசவும். நன்கு தண்ணீர் வடிய வைக்கவும். இனி மசாலா தயார் செய்யவும். ஒரு பவுலில் லெமன் ஜூஸ், காஷ்மீரி சில்லி பவுடர், மஞ்சள் தூள், சீரகத்தூள், எண்ணெய், தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

அந்த மசாலாவை கோழியின் மீது எல்லாப் பாகத்திலும் பூசவும். பின்பு பிழிந்த எலுமிச்சை மூடியை கோழியின் வயிற்றுப்பாகத்தில் வைக்கவும். மணமாக இருக்கும். பிறகு கோழியை ஒரு பாத்திரத்தில் வைத்து cling on paper போட்டு கவர் செய்து ஃப்ரிட்ஜில் 12 மணி நேரம் வைக்கவும். 

அல்லது ஒரு நாள் முன்பே ரெடி செய்து வைத்தும் ரோஸ்ட் செய்யலாம். கோழியை ஃப்ரிட்ஜை விட்டு வெளியே எடுக்கவும். ஒரு மணிமாவது ரூம் டெம்பரேச்சரில் நேரம் வெளியே வைக்கவும்.தண்ணீர் ஊறி இப்படி இருக்கும்.

ஊறிய சிக்கனை கிரில் பேனில் அலுமினியம் ஃபாயில் விரித்து,பின்பு கிரிலில் சிக்கனை எடுத்து வைக்கவும். அலுமினியம் ஃபாயில் கவர் செய்வதால் ட்ரேயை சுத்தம் செய்வது ஈசி. கேஸ் ஒவனை ஆன் செய்து 5 நிமிடம் முற்சூடு செய்யவும்.

மீடியம் ஃப்லேம் செட் செய்யவும். பின்பு உள்ளே சிக்கனை வைத்து அரைமணி நேரம் கழித்து திருப்பி வைக்கவும். நாலாபுறமும் நன்கு வேகும் படி திருப்பி வைத்து விரும்பினால் அப்ப அப்ப கொஞ்சம் ஆலிவ் ஆயில் தடவலாம்.

பின்பு அலுமினியம் ஃபாயில் கவர் செய்து 15 நிமிடம் வேக விடவும். ஓவனை ஆஃப் செய்யவும். 10 நிமிடம் இருக்கட்டும். நன்கு சுட்டவுடன் கவனமாக சிக்கனை எடுக்கவும். விரும்பினால் லேசாக பட்டர் தடவி கட் செய்து பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)