கேரட் ஜூஸ் செய்முறை | Carrot Juice Recipe ! - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

கேரட் ஜூஸ் செய்முறை | Carrot Juice Recipe !

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட்டை நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து ஜூஸ் போல செய்து 30 மி.லி அளவு குடித்து வர வேண்டும்.

கேரட் ஜூஸ்
கேரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டீன் இருப்ப தால் கேரட்டானது ஆரஞ்சு நிறத்தில் உள்ளது.

மேலும் இதில் நமது உடல் ஆரோக்கி யத்துக்கு தேவை யான விட்டமின் A சத்துக்களும் நிறைந் துள்ளது.

எனவே இந்த கேரட்டானது நமது உடம்பின் சருமம், நகம் மற்றும் தலைமுடி ஆகிய வற்றின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

காலை உணவிற்கு முன் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலை உணவிற்கு முன்பு தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், நமது உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும்

டாக்ஸின் களை வெளியேற்றி, ஆர்த்ரிடிஸ், மோசமான செரிமானம், வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல்

மற்றும் மூலநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கேரட் ஜூஸை குடிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமான நம்முடைய வேலைச் சுமைகள்

மற்றும் மன அழுத்தத் தால் ஏற்படும் மனச் சோர்வினை நீக்கும் சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது.

கேரட் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்தால், சோர்ந்துள்ள
இதய தசைகள் வலுவடைந்து, உடல் பருமன் ஏற்படாமல் எப்போதும் உடல் எடையை சீராக வைக்கிறது.

நமது வயிற்றில் சுரக்கப்படும் அதிகப் படியான அமிலத்தை தடுப்பதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸை குடிக்க வேண்டும்.

கேரட்டில் உள்ள விட்டமின் A சத்தானது, கல்லீரல், இரைப்பை, குடல், கண் பார்வை, இதயம்

ஆகிய வற்றின் ஆரோக்கி யத்தை மேம்படுத்தி. நோயெதிர்ப்பு மண்டல த்தின் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது.