சுவையான வாழைப்பூ துவையல் செய்வது எப்படி?





சுவையான வாழைப்பூ துவையல் செய்வது எப்படி?

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப் பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது.
சுவையான வாழைப்பூ துவையல் செய்வது எப்படி?
வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்பு களைக் கரைத்து வெளியேற்றும்.

மேலும், வயிற்றுப்புண் நீங்க, மூல நோயாளிகளுக்கு, பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், 
மாத விடாயின் போது அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப் படுதல் உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருந்து வாழைப்பூ ஆகும்.

வாழைப்பூ வடை, வாழைப்பூ பொரியல் செய்வது வழக்கம். சத்தான, சுவையான வாழைப்பூ துவையல் செய்வது பற்றி பார்க்கலாம்.
தேவையான் பொருட்கள் :

வாழைப்பூ - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1-1/2 தேக்கரண்டி

வத்தல் மிளகாய் - 3

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

புளி விழுது - 1/4 தேக்கரண்டி

தேங்காய் - 2 மேஜைக்கரண்டி (துருவியது)

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
சுவையான வாழைப்பூ துவையல் செய்வது எப்படி?
வாழைப்பூவை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி அதனுடன் தேவை யான அளவு நீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

கடையில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங் காயம், வத்தல் மிளகாய் போட்டு தாளித்து, பின்னர் புளி விழுது சேர்த்து 3 நொடிகள் வதக்கவும்.
பின்னர் வேக வைத்த வாழைப்பூவை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறவும். அதன் பிறகு தேங்காய் துருவலை சேர்த்து அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆற வைக்கவும்.

ஆறிய பிறகு மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, சிறிது நீர் விட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும். இப்போது சுவையான வாழைப்பூ துவையல் ரெடி.
Tags: