மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.
வங்காளம், அசாம் மற்றும் நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும்.
தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.
கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக அன்றாடம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து தப்பிக்கலாம்.
மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், மீன் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சரி இனி சூப்பரான புளி மீன் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மீன் – 1/2 கிலோ
பூண்டு – 4 பல்
எண்ணெய் – 100 மில்லி
புளிக்கரைசல் – 1/2 கப்
தேங்காய் – 1/2 மூடி (துருவி விழு தாக்கவும்)
மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
மீனைச் சுத்தம் செய்து தலை, வால் ஆகிய வற்றை நறுக்கவும். உப்பு போட்டு திருப்பவும், சுத்தம் செய்யவும்.
ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டிய பூண்டைச் சேர்க்கவும்.
தேங்காய் விழுதைச் சேர்த்து புளிக்கரை சலையும் சேர்க்கவும். கெட்டியான கிரேவியாக வரும் வரை சில நிமிடங்கள் வைத்தி ருக்கவும்.
மீனைச் சேர்த்து போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள இந்த செய்முறை சுவையான தாக இருக்கும்.