ருசியான சுரைப் பணியாரம் செய்வது எப்படி?





ருசியான சுரைப் பணியாரம் செய்வது எப்படி?

நெல்லை அவிக்காமல் நேரடியாக வெயிலில் உலர்த்தி அரைத்து உமி நீக்கினால், அது பச்சரிசிபச்சரிசி சாப்பிட்டால் உடல் சதைப் பிடிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். 
ருசியான சுரைப் பணியாரம் செய்வது எப்படி?
எனவே, உடல் மெலிந்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். 

சரி இனி பச்சரிசி கொண்டு ருசியான சுரைப் பணியாரம் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : 

பச்சரிசி – அரை கப் 

உளுந்து – அரை கப் 

உப்பு – ஒரு சிட்டிகை 

தேங்காய்ப்பால் – நான்கு கப் 

ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி

சர்க்கரை – தேவையான அளவு 

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : 
ருசியான சுரைப் பணியாரம் செய்வது எப்படி?
பச்சரிசி உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து சிட்டிகை உப்பு சேர்த்து மைய அரைக்கவும். கொட்டாங் குச்சியின் கண் இருக்கும் இடத்தில் ஓட்டை போடவும்.

அரைத்த மாவை கொட்டாங் குச்சியில் போட்டு சூடான எண்ணெயில் அழுத்தினால் மணி மணியான பணியாரம் ரெடி. இதை பொன்னிறமாகப் பொரித்து வெந்நீரில் போட்டு தனியாக வைக்கவும். 

இதற்கிடையில் தேங்காய்ப் பாலில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்துக் கலக்கவும். இதில் பணியாரங்களைச் சேர்த்து பத்து நிமிடம் ஊற வைத்துப் பரிமாறவும்.
பின் குறிப்பு : 

கொட்டாங் குச்சியை நன்றாக சுத்தப்படுத்தி விட்டுப் பயன்படுத்தவும். 
Tags: