அருமையான சில்லி சீஸ் பரோட்டா தயாரிப்பது எப்படி?

குழந்தைகளுக்கு எல்லா நேரமும் கார்போ ஹைட்ரேட் நிறைந்த சாதத்தையே கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. அவ்வப்போது, ரொட்டி, சப்ஜி, பரோட்டா போன்ற வற்றையும் கொடுக்கலாம். 
அருமையான சில்லி சீஸ் பரோட்டா தயாரிப்பது எப்படி?
அது போக, கிரீமி, சீஸி உணவுகளையும் கொடுக்கலாம். அந்த வகையில் குழந்தைகளால் விரும்பி சாப்பிடக் கூடிய சில்லி சீஸ் பராத்தாவை சுவையாக வீட்டிலேயே எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம். 
குடைமிளகாய் மற்றும் கார்ன், மிளகாய் ஆகியவை சேர்த்து மசாலா சுவையுடன் சீஸ் பரோட்டாவை செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

துருவிய சீஸ் - 1 கப்

வெங்காயம் - 1 கப்

பச்சை மிளகாய் - 3-4

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

முழு கோதுமை - தேவையான அளவு

பூண்டு - 4-5

சீரகத்தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - தேவையான அளவு

செய்முறை:
அருமையான சில்லி சீஸ் பரோட்டா தயாரிப்பது எப்படி?
முழு கோதுமை மாவில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவு தேவையான எண்ணிக்கையில் உருண்டையாக உருட்டி கொள்ளவும்.

ஒரு பௌலில் சீஸை துருவி எடுத்துக் கொண்டு, அதில் பூண்டு, உப்பு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், காய்கறிகள், வெங்காயம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவில் கலந்து வைத்துள்ள கலவையை வைத்து, ரொட்டி தேய்த்து கொள்ளவும். பரோட்டா நன்கு வருவதற்கு உலர்ந்த மாவை சேர்த்துக் கொள்ளலாம்.

அடுப்பில் பேன் வைத்து அதில் நெய் ஊற்றி, சூடானதும் அதில் தேய்த்து வைத்த சில்லி சீஸ் பரோட்டாவை சேர்த்து சூடாக தயார் செய்யலாம். 

இந்த சில்லி பரோட்டாவை, வெண்ணெய், புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம். ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்று.
Tags: