தேவையானவை

நண்டு - ஒரு கிலோ

புளி - எலுமிச்சை அளவு

பச்சை மிளகாய் - 4

தனியா பவுடர் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

எண்ணெய் - அரை கப்

பூண்டு – 2

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு

மிளகாய் வற்றல் – 3

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கடுகு - ஒரு தேக்கரண்டி

செய்முறை :
சிம்பிள் நண்டு கறி

முதலில் நண்டை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ளவும். 

பின்பு ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி இவற்றை நறுக்கிக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து பிறகு வெந்தயத்தை போட்டு சிவக்க விடவும்.

சிவந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.

கொதித்ததும் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மறுபடியும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அதில் கரைத்த புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் சுத்தம் செய்த நண்டு சேர்த்து உப்பு போட்டு தீயை மிதமாக வைத்து 20 நிமிடம் மூடிப் போட்டு வேக வைக்கவும்.

கலவை கெட்டியாக வந்ததும் அடுப்பி லிருந்து இறக்கவும்.

பின்பு பரிமாறவும்