அருமையான மட்டன் கீமா ரொட்டி செய்வது எப்படி?





அருமையான மட்டன் கீமா ரொட்டி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 200 கிராம்,

கொத்தின ஆட்டுக்கறி – 1/4 கிலோ,

பெரிய வெங்காயம் – 1,

பச்சை மிளகாய் – 2,

மிளகு தூள் – 1 தேக்கரண்டி,

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி,

இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,

எண்ணெய் – 4 மேசைக்கரண்டி.

உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
அருமையான மட்டன் கீமா ரொட்டி
​கொத்தின ஆட்டு கறியை சுத்தமாக கழுவவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

ப்ரஷர் பேனில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அத்துடன் கரம் மசாலா, மிளகு தூள், கழுவிய மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும். 
அத்துடன் உப்பு, 1/2 தம்ளர் தண்ணீர் சேர்த்து, மூடி, 3 விசில் விடவும். ஆறியதும் திறந்து, அதனுடன் கோதுமை மாவு சேர்த்து நன்கு பிசையவும்.

எழுமிச்சையளவு உருண்டைகளாக எடுத்து, லேசாக மாவு தொட்டு, சிறிது மொத்தமாக தேய்த்து, தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
Tags: