குழம்பில் ஏன் கடுகு பயன்படுத்துறோம்னு தெரியுமா?

குழம்பில் ஏன் கடுகு பயன்படுத்துறோம்னு தெரியுமா?

0

இந்த கடுகில் பல ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதனால் தான் நமது முன்னோர்கள் கடுகை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். கடுகை உண்பதால் உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன.  

குழம்பில் ஏன் கடுகு பயன்படுத்துகிறோம்னு தெரியுமா?
கடுகு தன் சுவையை குளிர்ந்த நீரில் தான் வெளியிடும். இதற்கு தனி சுவை கிடையாது. ஆனால் இதை சமைக்கும் போது எண்ணெயில் போட்டு தாழித்தால் நல்ல வாசனை தரும். 

இது தான் நமது இந்திய உணவின் சிறப்பம்சம். சல்ஃபர் அதிகம் காணப்படும் ஒரு பொருள் கடுகு. சல்ஃபர் நமக்கு இன்றியமையாத தாதுக்களில் ஒன்றாகும். சரி, அதனால் என்ன ?

சல்ஃபர் உள்ள மற்ற பொருட்கள் என்னென்ன தெரியுமா?

மீன், இறைச்சி, பழங்கள், பால் பொருட்கள், பூண்டு, வெங்காயம்.

மேற்கண்ட பொருட்கள் அனைத்துமே சேர்த்துக் கொள்ளாதவர்கள், சேர்த்துக் கொள்ள முடியாதவர்கள், ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுபவர்கள் உள்ளனர். சில எடுத்துக் காட்டுக்கள். 

சைவம் சாப்பிடுபவர்கள் மீன், இறைச்சி சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சில சைவப் பிரியர்கள் மீன், இறைச்சி மட்டுமல்லாமல் பூண்டு மற்றும் வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். 

சிலருக்கு பால் பொருட்கள், மீன் மற்றும் மஞ்சள் தோளுடைய பழங்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும். சிலர் சைவமாக இருந்து ஒவ்வாமையும் இருந்தால், இவற்றில் எந்த பொருளையும் பயன்படுத்த இயலாது. 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்களைத் தவிர்க்க வேண்டியிருக்கும். இவற்றில் நான்கைந்துப் பொருட்களைத் தவிர்ப்பவர்கள் குறைவு என்றாலும் அவருக்காக மொத்த குடும்பத்தின் சமையல் முறையே ஒரே விதத்தில் இருக்கும். 

எனவே ஒருவருக்கு சல்ஃபர் உணவில் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்து விடுகிறது. எனவே உங்களுக்கு சல்ஃபர் எந்த பொருளிலிருந்தும் கிடைக்க வில்லை என்றால்கூட சிறிதளவு கடுகு தாளிப்பதில் அது கிடைத்து விடுகிறது.

அது என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

குழம்பில் ஏன் கடுகு பயன்படுத்துகிறோம்னு தெரியுமா?

இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்க வல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டது. 

விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.

கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது.

கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. கடுகு சாப்பிடுவதால் உடலில் செரிமான சக்தி அதிகமாக கிடைக்கும்.

இதற்கான காரணம் இதில் இருக்கும் என்சைம்கள் தான். வயிற்றில் புண் இருப்பவர்கள் கடுகை தவறாமல் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்ணை விரைவில் குணப்படுதலாம்.

இதில் நிறைந்துள்ள ஆன்டி அல்சர் தான் இதற்கான காரணம். புற்று நோய் செல்கள் வளர்வதை இது ஆரம்பத்தில் இருந்து தடுத்து விடும், இதனால் மறக்காமல் கடுகை சாப்பிட்டு வருவது நல்லது.

புற்றுநோயினைத் தடுக்கும் கேரட் !

இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். 

கடுகு பொடி செய்யும் முறை : . 

வெறும் வாணலியில் 1 பட்டமிளகாய், கடுகு, 10 மிளகு, உப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து ஆற வைத்து அதை அம்மியிலோ அல்லது மிக்சியிலோ பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)