புற்றுநோயினைத் தடுக்கும் கேரட் !





புற்றுநோயினைத் தடுக்கும் கேரட் !

0
கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத் தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். 
புற்றுநோயினைத் தடுக்கும் கேரட்
தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், 

தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. 
கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்று நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய் களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு. 
உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும்.

மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.

கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய் புண்கள் சரியாகும். 

கேரட்டை பயன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். கேரட்டை பசையாக அரைக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வேண்டும்.

இதை வடிக்கட்டி குடித்துவர புண்கள் ஆறும். நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். ரத்த அணுக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

ஈரல் பலம் அடைகிறது. ரத்தம் சுத்தமாகும். தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறும். பித்தம், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும் போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம். 
கோடைகாலத்தில் குளிர்ச்சி தருகிறது. தோலுக்கு வண்ணத்தை தருகிறது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும்.

உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.

ஒரு கப் கேரட் ஜூஸை தவறாமல் உட்கொள்வது கூட சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது மற்றும் ஆரோக்கியமான நிறத்தை நிர்வகிக்கிறது. 

கூடுதலாக, ஒரு கப் கேரட் சாறு, கொலாஜன் உற்பத்திக்குத் தேவையான நீரில் கரையக்கூடிய ஊட்டமான வைட்டமின் சிக்கான 20% டி.வி. யை வழங்குகிறது. 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)