டேஸ்டியான பிரண்டை புளிக்குழம்பு செய்வது எப்படி?





டேஸ்டியான பிரண்டை புளிக்குழம்பு செய்வது எப்படி?

0

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். 

டேஸ்டியான பிரண்டை புளிக்குழம்பு செய்வது எப்படி?
ஞாபக சக்தியை பெருக்கும். மூளை நரம்புகளை பலப்படுத்தும். எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். 

வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் வனப்பும் பெறும். ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். 

இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். 

சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் !

இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து. சரி இனி பிரண்டை பயன்படுத்தி டேஸ்டியான பிரண்டை புளிக்குழம்பு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையான பொருள்கள் . : 

நறுக்கிய பிரண்டைத் துண்டுகள் - 1 கிண்ணம் 

தக்காளி - 1 

சின்ன வெங்காயம் - கால் கிண்ணம் 

பெருங்காயம் - சிறிதளவு 

தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம் 

எண்ணெய் - 30 மில்லி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி 

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி 

சீரகத் தூள் - கால் தேக்கரண்டி 

மிளகுத் தூள் - சிறிதளவு 

புளி - சிறிதளவு 

தாளிக்க . : 

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை . : 

டேஸ்டியான பிரண்டை புளிக்குழம்பு செய்வது எப்படி?

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், பின்னர், சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள பிரண்டைத் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். 

நன்றாக ஊற்றி மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். 

பெண்கள் எப்போது உறவு கொள்ள விரும்புகிறார்கள்?

புளிவாசனை போய் குழம்புப் பதம் வந்தவுடன் அதில் துருவி வைத்துள்ள தேங்காய்த் தூள் போட்டு சிறிது நேரத்தில் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)