டேஸ்டியான சீஸ் சாட் செய்வது எப்படி?





டேஸ்டியான சீஸ் சாட் செய்வது எப்படி?

0

வெண்ணெய் அல்லது சீஸ் உள்ளிட்ட உணவை பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த முடியும்.

டேஸ்டியான சீஸ் சாட் செய்வது எப்படி?
சீஸ் உணவுகளை சாப்பிடாதவர்களைக் காட்டிலும், சீஸ் மற்றும் வெண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு கெட்ட கொழுப்பு அளவு குறையும். 

சீஸில் அதிக அளவு கொலஸ்ட்ரால் அதிக அளவாக இருப்பதாக பலரும் நினைப்பதைப் போல, சீஸில் கொழுப்பு உள்ளது.

ஆனால், அது நல்ல கொழுப்பு தான் என்பதால் அதனை சரியான அளவில் தினந்தோறும் எடுத்துக் கொள்வது நல்லது. அதே போல், வெண்ணெயை விட சீஸில் கால்சியத்தின் அளவு அதிகமாக உள்ளது. 

சீஸை அதிகம் சாப்பிடாத வரை எலும்புகளை வலிமையாக்குவது முதல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது வரை நமக்கு பல நன்மைகளை அளிக்கும். கால்சியம், கொழுப்பு மற்றும் புரோட்டினின் சிறந்த மூலமாக சீஸ் இருக்கிறது.

உணவுக்குழாய் புற்று நோய்க்கான காரணம் என்ன?

தவிர சீஸில் ஜிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ரிபோஃப்ளே உள்ளிட்டவற்றுடன் அதிக அளவு வைட்டமின்ஸ் ஏ மற்றும் பி-12 காணப்படுகிறது. 

எனவே சீஸ் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் தருகிறது.

தேவையானவை : .

சீஸ் துருவல் – ஒரு கப், 

ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – கால் கப், 

உருளைக்கிழங்கு – 2, 

வெங்காயம், தக்காளி  – தலா ஒன்று, 

சாட் மசாலா பொடி, 

ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி – தலா ஒரு டீஸ்பூன், 

உப்பு, எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு, 

கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை : .

டேஸ்டியான சீஸ் சாட் செய்வது எப்படி?

உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

ஒரு அகலமான தட்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி சேர்க்கவும். 

பிறகு மேலே சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, உப்பு, எலுமிச்சைச் சாறு, ஓமப்பொடி, சீஸ் துருவல் சேர்க்கவும். கடைசியாக கொத்த மல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)