அருமையான கீன்வா சாலட் செய்வது எப்படி?





அருமையான கீன்வா சாலட் செய்வது எப்படி?

0

கீன்வா என்பது ஒருவகை வெளிநாட்டு தானியம். நம் நாடு சிறுதானியங்கள் போலவே இதுவும் சிறந்த சத்துணவு. அமெரிக்க முன்னாள் அதிபர், ஒலிம்பிக் தங்கம் வென்ற வீராங்கனை போன்றோர் விரும்பும் கீன்வாவில் ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. 

அருமையான கீன்வா சாலட் செய்வது எப்படி?
இந்த சாலடுகள் கோடையில் நம்மை குளிர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது. மேலும் பல நோய்களை தடுத்து ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. 

மேலும் பிரஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன சாலடுகளை உட்கொள்வதால், புற்று நோய் மற்றும் இதய நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.

நறுக்கப்பட்ட காய்கறிகளுடன் வேக வைத்த கீன்வாவை சேர்த்தால் எளிதான ஊட்டசத்துள்ள சிற்றுண்டி தயார். உப்புமா, கஞ்சியிலும் இதைச் சேர்க்கலாம். 

இதைப் பயன்படுத்தி பேன்கேக், பிரட், மஃபின், கிராகர்ஸ் போன்றவற்றை தயாரிக்கலாம். ஆனால், கோதுமை மாவுக்கு பதிலாக பயன்படுத்துவது சற்று செலவை அதிகரிக்கும். முளை கட்டியோ, சாண்டுவிச்களில் நிரப்பியோ சாப்பிடலாம்.

தேவையானவை . :

கீன்வா - 3/4 கப் 

மிளகு தூள் - சிறிதளவு

வறுக்கப்பட்ட கீன்வா சாலட்

பெரிதாக நறுக்கப்பட்ட கேரட் - 1 

சிவப்பு குடை மிளகாய் - 1/2 கப் 

நசுக்கப்பட்ட லவங்கம் - 2 பல் 

டாபாஸ்கோ - 1 தேக்கரண்டி 

சோயா சாஸ் - 1 1/2 மே.கரண்டி 

நறுக்கப்பட்ட வெங்காயத் தாள் - 2 

எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி 

வெட்டப்பட்ட பார்ஸ்லே இலை, சிலான்ட்ரோ இலை - 1/4 கப் 

செய்முறை . : 

அருமையான கீன்வா சாலட் செய்வது எப்படி?

தினையை வானலியில் போட்டு வறுக்கவும். 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 15 நிமிடங்கள் வேக வைத்து, பிறகு 10 நிமிடங்களுக்கு ஆறவிடவும். 

கேரட், குடை மிளகாய், பார்ஸ்லே, வெங்காயத் தாளை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கலக்கவும். கீன்வாவை சேர்க்கவும். சோயா சாஸ், பூண்டு, டாபாஸ்கோவை சாலட் உடன் கலக்கவும். 

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

கடைசியாக எலுமிச்சைசாறு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். சத்து நிறைந்த கீன்வா வெஜிடபிள் சாலட் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)