பேபி கார்னில் உள்ள நன்மைகள் தெரியுமா?

பேபி கார்னில் உள்ள நன்மைகள் தெரியுமா?

0

பேபி கார்ன் என்பது ஆரம்பத்தில் காலத்திலேயே அறுவடை செய்யப்படும் மக்காச்சோள தானியமாகும். இந்த பேபி கார்ன்கள் அதன் தண்டுகளோடு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடப் படுகின்றன. 

பேபி கார்னில் உள்ள நன்மைகள் தெரியுமா?
பேபி கார்னின் தண்டுகள் மிகவும் மென்மையாக இருப்பதால், நன்கு வளர்ந்த மக்காச் சோளத்தின் தண்டுகளில் இருந்து பருப்புகள் பிரித்தெடுக்கப் படுவது போல அவை பிரிக்கப் படுவதில்லை. 

பேன் கார்ன் என்பது டென்ட் கார்ன், இந்தியன் கார்ன் மற்றும் ஸ்ட்ரைப்டு கார்ன் போன்ற பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. 

சோளத்துடன் ஒப்பிடும் போது பேபி கார்னில் குறைவான கலோரி உள்ளது மற்றும் கிட்டத்தட்ட கொழுப்பு என்பது சுத்தமாக இல்லை. பேபி கார்ன் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்று மற்றும் உங்கள் தினசரி உணவில் இதனை சேர்க்கலாம். 

தற்போது இந்த பாபி கார்ன்கள் கான்டினென்டல் மற்றும் ஆசிய உணவு வகைகளில் இன்றியமையாத பொருளாக மாறி விட்டன. இது சாலட்களில் பயன்படுத்தப் படுகிறது. 

பேபி கார்னில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ, ஃபோலேட், தியாமின் மற்றும் பாந்தோத்தெனிக் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

குளிக்கும் போது முதல்ல தண்ணிய எங்க ஊத்துவீங்க சொல்லுங்க !

இதனால் பேபி கார்ன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நண்மைகளும் ஏராளம். அவற்றின் நன்மைகள் குறித்து காணலாம்.

எடையை குறைக்க உதவும் . :

பேபி கார்னில் உள்ள நன்மைகள் தெரியுமா?

ஏற்கனவே சொன்னதுபோல பேபி கார்னில் கிட்டத்தட்ட கொழுப்பு இல்லை மற்றும் கலோரிகளும் குறைவாக உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க வழக்கமான உங்கள் உணவில் இவற்றை கண்டிப்பாக சேர்க்கலாம். 

மேலும் சோளத்துடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் குறைவான மாவுச்சத்து உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. 

எனவே நீங்கள் எடை இழப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தால் பேபி கார்ன்களை பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது நெருப்பில் வாட்டியோ சாப்பிடலாம். 

மேலும் பேபி கார்னில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இதனை உட்கொண்ட பிறகு, அது ஜீரணிக்க நிறைய நேரம் எடுக்கும். இதன் காரணமாக உங்களை அதிக நேரம் முழுமையானதாக உணர வைக்கும்.

கண்பார்வை மேம்படுத்த உதவும் . :

பேபி கார்னில் உள்ள நன்மைகள் தெரியுமா?

நாம் அன்றாடம் டிஜிட்டல் ஸ்க்ரீன்களில் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில், பேபி கார்ன்களை சாப்பிடுவது மிக அவசியம். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதனால் கண் ஆரோக்கியம் மேம்படும். 

வைட்டமின் ஏ -யின் நல்ல ஆதாரமான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நம் கண்களைப் பராமரிக்கலாம். 

கரோட்டினாய்டுகள் தாவரங்கள் மற்றும் பாசிகளில் காணப்படும் ஒரு வகை நிறமி ஆகும். இது மஞ்சள், சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது. இது உடலுக்குள் நுழையும் போது, ​​அது வைட்டமின் ஏ ஆக மாறுகிறது. 

சோற்று கற்றாழை ஜூஸ் செய்வது !

உடலில் குறைந்த அளவு வைட்டமின் ஏ அறிகுறிகள் இரவில் குருட்டுத் தன்மை மற்றும் அபாயகரமான நோய்த்தொற்றுகள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதுவே பேபி கார்ன்களை சாப்பிட்டால் அதனை தவிர்க்கலாம்.

நமது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் . :

பேபி கார்னில் உள்ள நன்மைகள் தெரியுமா?

மனித தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்தவை. அதற்கு சரியான கவனிப்பும் ஊட்டச்சத்தும் அவசியம் தேவை. நம் நகங்கள், முடி மற்றும் தோல் இவற்றின் மீது சரும பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியாது. 

இவை ஆரோக்கியமாக இருக்க நாம் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும். நமது சருமம் பொதுவாக சூரியனின் தூசி, மாசு மற்றும் புற ஊதா கதிர்களால் பாதிக்கப் படுகிறது. 

இது நம் சருமத்தை மந்தமாக்குவதோடு, அரிப்பு அல்லது நிறமி போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது. 

எனவே நமது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று பேபி கார்ன். ஏனெனில் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. 

மேலும் இவை சரும செல்களை சரிசெய்ய உதவுகின்றன. இது தவிர நம் உடலின் தோல் அடுக்குகளை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.

பிற ஆரோக்கிய நன்மைகள் . :

பேபி கார்னில் உள்ள நன்மைகள் தெரியுமா?

பேபி கார்னில் ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. எனவே கர்ப்ப காலங்களில் பேபி கார்னை பெண்கள் சாப்பிடுவது மிக அவசியம். 

ஏனெனில் ஃபோலிக் அமிலம் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் பிறக்காத குழந்தையின் அசாதாரண அறிகுறிகளை தடுக்கிறது. 

பேபி கார்னில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே போல தமனி அடைப்புக்கான சாத்தியக் கூறுகளையும் குறைக்கிறது. 

கண்களில் தொடர்ந்து நீர் வடிவதற்கான காரணங்கள் என்ன?

இதில் உள்ள வேறு சில ஊட்டச் சத்துக்களான துத்தநாகம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவை ஒருவருக்கு மேலும் வலிமை சேர்க்கிறது.

உணவுகளில் இவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம்?

பேபி கார்னில் உள்ள நன்மைகள் தெரியுமா?

ஆசிய உணவு வகைகளில் பேபி கார்ன் பொரியலாக சமைத்து சாப்பிடப்படுகிறது. அதாவது நீங்கள் இதனுடன் வேறு சில காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சேர்த்து எண்ணைய்யில் வதக்கி சாப்பிடலாம். 

அதே போல சாலட் செய்யும் போது அவற்றில் பேபி கார்ன்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் இது சாலட்டில் ஒரு தனித்துவமான மற்றும் முறுமுறுப்பான சுவையை தருகிறது. 

சூப்களில் கூட இதனை சேர்த்து சமைக்கலாம். பேபி கார்ன்களை கொண்டு நீங்கள் செய்யும் ஒரு பிரபலமான சிற்றுண்டிகளில் கார்ன் ஃபிரையும் அடங்கும். 

கால் வீக்கம், நரம்பு சுருக்கம் - அலட்சியம் சிக்கல் !

இதற்கு பேபி கார்ன்களை நீங்கள் விரும்பிய மாவு மசாலா கலவையில் நனைத்து அதனை எண்ணையில் வறுத்தெடுக்க வேண்டும். 

பேபி கார்ன்ஸை சீன சமையலிலும் பயன்படுத்தலாம் மற்றும் மஞ்சூரியன்கள், காரமான காய்கறி கொண்டு சமைக்கப்பட்ட கிரேவிகளில் சேர்த்து சமைக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)