தினமும் ராகி சாப்பிடலாமா? சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

தினமும் ராகி சாப்பிடலாமா? சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

0

கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதற்கும் புரதச்சத்து உதவுகிறது. 

தினமும் ராகி சாப்பிடலாமா? சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
தினமும் கேழ்வரகில் செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. 

ராகி, கம்பு இரண்டுமே உடலுக்கு வலுவும், உடல் எடையை கட்டுபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ராகிய தோசையாவோ, இல்ல புட்டாவோ செஞ்சு சாப்பிடலாம்.

அரிசியை விட குறைந்த சர்க்கரைச் சத்து, 18 மடங்கு அதிக நார்ச்சத்து உள்ளதால், உண்டபின் இரத்தத்தில் சர்க்கரை அளவை டபக் என ஏற்றாமல், மிக சீராக ஏற்றும் தன்மையுடைய (Low Glycaemic Index Food), நல்ல உணவு ராகி.

இருப்பினும் கூழாய் குடிக்காமல், களியாய், ரொட்டியாய் உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு உத்தமம். அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவையை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது.

மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும். எந்த தானியத்தை விடவும் ராகியில் தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. 

வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் பாலியல் கல்வி !

இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது.

பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் என கலவையான அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு, எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு.

இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது (Baby Food). 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது.

புதுத் தாயின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்யும் ஓர் உணவு.

சிலருக்கு க்லூடன் அலர்ஜி என கூறப்படும், கோதுமை முதலான உணவுப் பொருட்களால் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகில், க்லூடன் இல்லாததால், ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம்.

தினமும் ராகி சாப்பிடலாமா? சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

இவ்வாறு, 6 மாத குழந்தை முதல் 1200 மாத குழந்தை வரை (100 வயசு தாத்தாவும் குழந்தை தானே) எளிதில் ஜீரணமாகக் கூடியதும், ஊட்டச்சத்தை அள்ளித் தருவதுமான மிகச் சிறந்த உணவுகளில் ராகியும் உண்டென்றால், அது சூப்பர் ஃபுட் தானே!

அதனால்தான் என்னவோ, நம் வழக்கில் உள்ள இட்லி, தோசை, புட்டு, களி, கஞ்சி, பக்கோடா, இனிப்பு உருண்டை என உணவுகளில் என்னென்ன வகையுள்ளதோ அத்தனையிலும் ராகியை பயன்படுத்துவது மிக நன்மை.

குங்குமப்பூ பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் !

கால்ஷியம் அதிகமாக உள்ளதால் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகரித்து பயன் படுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)