ராகி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் தெரியுமா?

ராகி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் தெரியுமா?

0

ராகி மற்ற தானியங்களை போலவே அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும். ரத்த சோகை, அதிக எடை, தூக்கப் பிரச்சினைகள், பதட்டம் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு ஆரோக்கிய உணவாகும். 

சிறுநீரகத்தில் கற்கள், ஆக்சாலிக் அமிலம், கேழ்வரகு உணவு, தைராய்டு பிரச்சனை,
இந்த ராகியில் அதிகமான ஆக்சிஜன் ஏற்றிகள், வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளன. இப்போது இந்த ராகி உணவுகள் பிஸ்கேட், ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களாகவும் சந்தைகளில் கிடைக்கிறது. 

ராகியில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. ஆனால் எடையை அதிகரிக்க விரும்பும் ஒருவருக்கு இந்த ராகி பயனளிக்காது. செரிமான பிரச்சனை உள்ளவர்களும் கேழ்வரகு சாப்பிடக்கூடாது. 

குறிப்பாக பசியின்மை, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. குளிர்காலங்களில் கேழ்வரகு சாப்பிடுவதை பொதுவாகவே தவிர்ப்பது நல்லது. குறிப்பாக குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட்டால் ஆகாது எனில் தொடவே கூடாது.

மது பானங்களிலேயே பீர் ஏன் உடலுக்கு நல்லது - தெரியுமா ?

சிறுநீரக பிரச்சனை : .

சிறுநீரகத்தில் கற்கள் பிரச்சனை மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு கேழ்வரகு உணவு ஏற்றதல்ல. 

ஏனெனில், கேழ்வரகை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் நமது உடலில் ஆக்சாலிக் அமில தன்மை அதிகரிக்கிறது. எனவே, சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால் ராகியை உட்கொள்ள வேண்டாம்.

தைராய்டு பிரச்சனை : .

தைராய்டு, உடல் எடையை அதிகரிக்க, ஞாபக சக்தியை அதிகரிக்க, செரிமான பிரச்சனை, அதிக ஊட்டச்சத்து

ராகி பொதுவாக ஹைபோ தைராய்டிசதிற்கு மோசமான தைராய்டு வீக்க காரணி சேர்மங்களை கொண்டுள்ளது. எனவே ராகியை அதிக அளவில் எடுத்துக் கொள்வது தைராய்டு நோயாளிகளின் பிரச்சனையை அதிகரிக்கும். 

ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு இரண்டு வகையான தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுமே கேழ்வரகு உணவை தவிர்ப்பது நல்லது.

உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா தெரியுமா?

சிறுகுடலில் சேதம் : .

ராகியை உணவில் அளவிற்கு அதிகமாக சேர்த்துக் கொள்வதால், சிறுகுடலில் சேதம் ஏற்படலாம். இதனால் வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற உடல நல பிரச்சனைகள் ஏற்படலாம். 

மேலும் அதிக அளவிலான கேழ்வரகு பசியின்மை, வீக்கம், அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

​மலச்சிக்கல் : .

ராகி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் தெரியுமா?

ராகி குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் சிலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.

எடை இழப்பு : .

உடல் எடையை அதிகரிக்க விரும்பும் நபர்கள் இந்த ராகி சார்ந்த எந்த ஒரு உணவையும் குறைத்துக் கொள்ள வேண்டும். 

இதில் பசையம் இல்லாததால் உடல் எடை இழப்பு ஏற்படுகிறது. எனவே எடையை அதிகரிக்க விரும்பும் ஒருவருக்கு இந்த உணவு பரிந்துரைக்கப் படுவதில்லை.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)