கர்நாடகா ஸ்டைலில் முள்ளங்கி சட்னி செய்வது எப்படி?





கர்நாடகா ஸ்டைலில் முள்ளங்கி சட்னி செய்வது எப்படி?

0

கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது.

முள்ளங்கி சட்னி, இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, நார்ச்சத்து உள்ள முள்ளங்கி
முள்ளங்கி குறைந்த கார்போ ஹைட்ரேட், மாவுச்சத்து இல்லாத, காய்கறிகளில் ஒன்றாகும். ஒரு கப் வெட்டப்பட்ட முள்ளங்கிகள் சுமார் 3.4 கிராம் கார்போ ஹைட்ரேட்டுகளை வழங்கும். 

அவற்றில் பெரும்பாலானவை நார்ச்சத்து ஆகும். முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாது உப்புக்களையும் அளிக்கின்றன.

காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்து விட்டதா? 

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் இயற்கை ஜூஸ்கள் !

சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? இதுவரை நீங்கள் முள்ளங்கியைக் கொண்டு சாம்பார் தான் செய்திருப்பீர்கள். 

அந்த முள்ளங்கியைக் கொண்டு சட்னி செய்துள்ளீர்களா? இல்லை யென்றால், இன்று அதை முயற்சி செய்து பாருங்கள். 

தேவையான பொருட்கள் : .

முள்ளங்கி - 1 

வெங்காயம் - 1 (நறுக்கியது) 

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் 

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் 

காஷ்மீரி வரமிளகாய் - 4 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 

புளி - 1 எலுமிச்சை அளவு 

உப்பு - சுவைக்கேற்ப 

எண்ணெய் - 1 டீஸ்பூன் 

தாளிப்பதற்கு... 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 

எண்ணெய் - 1 டீஸ்பூன் 

செய்முறை :  .

தாது உப்பு, வைட்டமின் சத்து, கார்போ ஹைட்ரேட், முள்ளங்கி சாம்பார்,

முதலில் முள்ளங்கியை எடுத்து, அதன் தோலை நீக்கி விட்டு, துருவிக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் முள்ளங்கி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி பச்சை வாசனை போக நன்கு வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். 

முதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…!

பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் வதக்கி காய்கறியை சேர்த்து, அத்துடன் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். 

இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான முள்ளங்கி சட்னி தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)