காளையின் விந்துவை தேய்த்தால் வழுக்கையில் முடி வளருமாம் !





காளையின் விந்துவை தேய்த்தால் வழுக்கையில் முடி வளருமாம் !

0

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடி தான் தலையாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம் காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, 

காளையின் விந்துவை தேய்த்தால் வழுக்கையில் முடி வளருமாம் !
செயற்கை அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்து விட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்து விடுகிறது.

முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. அனாஜன் (Anagen) என்பது வளரும் பருவம்.

ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லி மீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். 

இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது ‘காட்டாஜன்’ (Catagen) என்று ஒரு பருவம். இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். 

இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும். 

இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். 

பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும். இதனைப் போக்க பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். 

அந்த வகையில் பண்டைய கால எகிப்தியர்கள் மற்றும் பழங்கால மக்கள் கடைப்பிடித்து வந்த சில பழக்கங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும் போது அதிர்ச்சியில் உறைந்து விடுவோம்.

நல்ல வேளையாக இந்த பழக்கங்கள் இப்போது நடைமுறையில் இல்லை. வழுக்கையைப் போக்க பின்பற்றப்பட்ட சில வித்தியாசமான வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காளை மாட்டின் விந்து

காளையின் விந்துவை தேய்த்தால் வழுக்கையில் முடி வளருமாம் !
முடி வளர்ச்சியைப் பொறுத்தவரை, காளை மாட்டின் விந்துக்கள் புரதத்தில் நம்பமுடியாத அளவிற்கு வளமானதாக நம்பப்படுகிறது 

இது முடி வளர்ச்சியை ஊட்டி வளர்க்க உதவுகிறது என்று முடி சிகிச்சைக்கான நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதும் யு.எஸ் மற்றும் யு.கேவில் முடி திருத்தகங்களில் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

புறாவின் எச்சம்

தலை முடி வழுக்கைக்கான சிகிச்சையில் புறாவின் எச்சம் பயன்படுத்தப் பட்டதை உங்களால் நம்ப முடிகிறதா? நவீன மருத்துவத்தின் தந்தையாக கருதப்படுகின்ற ஹிப்போகிராட்ஸ் 

புறாவின் எச்சம், அபின், பீட்ரூட், குதிரை முள்ளங்கி, மற்றும் மசாலாக்களின் கலவை ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்ட ஒரு மருந்தை வழுக்கைக்கான சிகிச்சையாக பரிந்துரைத்து இருக்கின்றனர்.

கொதிக்கும் சில்லி சாஸ்

காளையின் விந்துவை தேய்த்தால் வழுக்கையில் முடி வளருமாம் !
கொரிய ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு 2003 கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், எலிகள் மீது வேகமான விகிதத்தில் முடி வளர மிளகாயில் இருக்கும் காப்சைசின் என்னும் கூறு எப்படி உதவியது என்பதை விஞ்ஞானிகள் விவரித்தனர். 

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த பரிசோதனை மனிதர்களுக்கு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நேர்மறை பலனைக் கொடுக்கவில்லை.

மிருகங்களின் கொழுப்பை

வழுக்கையைப் போக்க பண்டைய கால எகிப்தியர்கள் ஒரு விசித்திர முறையைக் கையாண்டனர். 

சிங்கம், காண்டாமிருகம், முதலை, பூனை, பாம்பு, மலையாடு, ஆகிய மிருகங்களின் கொழுப்பை ஒன்றாகக் கலந்து ஒரு மருந்து தயாரித்து அதனை தடவுவதால் வழுக்கை குணமாகிறது என்று ஒரு வித்தியாசமான சிகிச்ச்சை முறையை கடைப்பிடித்து வந்தனர்.

பசுமாட்டு கோமியம்

காளையின் விந்துவை தேய்த்தால் வழுக்கையில் முடி வளருமாம் !
பசுமாட்டின் சிறுநீர் கோமியம் என்று அழைக்கப்பட்டு இந்தியாவில் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுநீர் தலை முடிக்கான சிகிச்சையில் மிகவும் பயனளிப்பதாக நம்பப்படுகிறது. 

இந்த வகை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறுநீர் கன்னி மாட்டின் சிறுநீராக இருக்க வேண்டும் என்பது நியதியாகும். இந்த சிறுநீரை எடுத்து, சூரிய உதயத்திற்கு முன் அருந்த வேண்டும். 

இந்த செயலை எளிதாக்க, ஒரு இந்திய நிறுவனம் ஒரு குளிர்பானத்தை அறிமுகம் செய்தது. இந்த பானத்தில் 5% பசுவின் சிறுநீர் சேர்க்கப் பட்டுள்ளது.

குதிரை பல், சுண்டெலி

இந்த மிக விசித்திர முறையை பின்பற்றி வழுக்கையை போக்க நினைத்தது நம் அனைவருக்கும் தெரிந்த கிளியோபட்ரா. 

தன் காதலர் ஜூலியஸ் சீசரின் வழுக்கையைப் போக்க அவர் சுண்டெலியை அரைத்து அதனுடன் குதிரை பற்களை சேர்த்து ஒரு மருந்து தயாரித்தார். 

ஆனால் அந்த மருந்து தகுந்த பலனை அளிக்கவில்லை. அதனால் ஜூலியஸ் தனது வழுக்கையை மறைக்க இலைகளால் செய்த மாலையை தனது தலையில் கிரீடம் போல் வைத்துக் கொள்ளத் தொடங்கினார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)