திரிபலா சூரணம் எப்போதும் எடுத்துக் கொள்ளலாமா?

திரிபலா சூரணம் எப்போதும் எடுத்துக் கொள்ளலாமா?

0
திரிபலா என்பது மிகவும் பழமை வாய்ந்த இயற்கையான மருத்துவ முறையாகும். திரிபலா என்பது மூன்று விதமான மூலிகைகள் இருந்து தயாரிக்கப் படுகிறது.
திரிபலா சூரணம் எப்போதும் எடுத்துக் கொள்ளலாமா?
இந்த மருந்து பழங்காலம் முதல் உபயோகப்படுத்தி வருகிறார்கள். இது உடல் எடை குறைப்பிற்கு மட்டுமல்லாமல் பலவித உடல் நன்மைகளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கிறது.

திரிபலா என்பது மிகவும் பழமை வாய்ந்த இயற்கையான மருத்துவ முறையாகும். திரிபலா என்பது மூன்று விதமான மூலிகைகள் இருந்து தயாரிக்கப் படுகிறது. 

இந்த மருந்து பழங்காலம் முதல் உபயோகப்படுத்தி வருகிறார்கள். இது உடல் எடை குறைப்பிற்கு மட்டுமல்லாமல் பலவித உடல் நன்மைகளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கிறது. 

மூலிகைகளான கடுக்காய் (Terminalia chebula), தான்றிக்காய் (Terminalia belerica), நெல்லிக்காய் (Emblica officinalis) ஆகிய மூன்றின் கலவை, முறையே 1 : 2 : 3 என்ற விகிதத்தில் சேர்ந்த கலவையே, திரிபலா என்றழைக்கப் படுகிறது. 

உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவர்களால், பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

உடல்நல பாதிப்புகளிருந்து, அவை திரிபலாவால் விரைவில் நீங்கும் சாத்திய மிருந்தால், குணமாகும் வரை, திரிபலாவை தினமும் உட்கொள்ளலாம்.
மற்றபடி ஆரோக்கியமான உடல் நிலையிலுள்ள போது, திரிபலா பொடியைத் தினசரி எடுத்துக் கொள்ளக் கூடாது. கணிசமான கால இடைவெளி விட்டு உட்கொள்வதே சிறந்தது. 

உதாரணமாக, வாரத்தில் 4 நாட்கள் உட்கொண்டு, மூன்று நாட்கள் இடைவெளி விடலாம் (அ) 10 நாட்கள் உட்கொண்டு 5 நாட்கள் இடைவெளி விடலாம்.

நல்ல உடல் நலனுடன் உள்ள போது திரிபலாவை தொடர்ந்து உட்கொண்டால், உடல், உணவிலுள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் சிறிது தடை ஏற்படும். எடை மிகவும் மெலியலாம். மலம் தொடர்ந்து கழிச்சலாகவே போகும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)